» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்காசி மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகள் : இடஒதுக்கீடு விபரம் அறிவிப்பு

செவ்வாய் 18, ஜனவரி 2022 3:13:20 PM (IST)

தென்காசி மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகள் மற்றும் 18  பேரூராட்சிகளின் தலைவர் பதவிக்கான இட ஒதுக்கீடு விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது .

தென்காசி மாவட்டத்திலுள்ள தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில், சுரண்டை, ஆகிய  6 நகராட்சிகளில் புளியங்குடி நகராட்சி தலைவர் பதவி எஸ்.சி பெண், செங்கோட்டை நகராட்சி தலைவர் பதவி  பொது பெண், சங்கரன்கோவில் நகராட்சி பகுதி பெண் பொது,  பிரிவிற்கும் தென்காசி  நகராட்சி பொது பிரிவிற்கும், கடையநல்லூர் - பொது பிரிவிற்கும்,  சுரண்டை - பொது பிரிவிற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள 18  பேரூராட்சி தலைவர்கள் பதவிக்கு இலஞ்சி - எஸ்சி பெண், சுந்தரபாண்டியபுரம் - எஸ்சி பெண், திருவேங்கடம் - எஸ்சி பொது,  புதூர் (செ) - எஸ்சி பொது,  ஆய்க்குடி - எஸ்.சி பொது,  ஆழ்வார்குறிச்சி - பெண் பொது ராயகிரி - பெண் பொது,  ஆலங்குளம்- பெண் பொது,  வாசுதேவநல்லூர் - பெண் பொது, மேலகரம் - பெண் பொது,  சிவகிரி - பெண் பொது, குற்றாலம் - பொது, பண்பொழி - பொது, வடகரை கீழ்பிடாகை - பொது, அச்சன்புதூர் - பொது, சாம்பவர்வடகரை - பொது,  கீழப்பாவூர் - பொது, முக்கூடல் - பொது பிரிவிற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored AdsTirunelveli Business Directory