» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ராயகிரி பேரூராட்சித் தலைவர் பதவியை பொது பிரிவிற்கு மாற்ற கோரிக்கை

வியாழன் 20, ஜனவரி 2022 11:06:30 AM (IST)

ராயகிரி பேரூராட்சித் தலைவர் பதவியை பொது பிரிவிற்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி ராயகிரி பேரூராட்சியில் தெற்கு சத்திரம், வடுகபட்டி, மேல கரிசல்குளம், ராயகிரி ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 15 வார்டுகள் உள்ளன. ராயகிரி பேரூராட்சியில் தலைவராக ஏற்கனவே தொடர்ந்து இரண்டு தடவை பொது பெண்கள் பிரிவினரும், தொடர்ந்து இரண்டு தடவை எஸ்சி ஆண்கள் பிரிவினரும் பதவி வகித்து வந்துள்ளனர்.

சுழற்சி அடிப்படையில் இந்த ஆண்டு நடைபெறக்கூடிய பேரூராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு பொது ஆண்கள் பிரிவிற்கு ஒதுக்கப்பட வேண்டும் என்பதே விதியாகும்.  இந்த நிலையில் நேற்று முன்தினம் தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ள அரசு ஆணையில் ராயகிரி பேரூராட்சி மன்ற தலைவர் பதவியானது மீண்டும் பெண்கள் பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது ராயகிரி பேரூராட்சியில் பெண் வாக்காளர் 5155 பேரும், ஆண் வாக்காளர் 4936 பேரும் உள்ளனர்.

ஏற்கனவே பேரூராட்சி அதிகமான எல்லை பகுதியினை கொண்டு உள்ளதால் சிறந்த முறையில் நிர்வாகம் செய்வதற்கு பொது ஆண்கள் பிரிவுக்கு ஒதுக்கினால் தான் சிறப்பாக பணிபுரிய முடியும் இப் பேரூராட்சியில் உள்ள அரசியல் கட்சியினர் கருதுகின்றனர்.  இதுவரை பேரூராட்சி  மன்ற தலைவர் பதவி பொதுப்பிரிவினருக்கு கொடுக்கப்படாமல் இருந்து வருகிறது. இது இன சுழற்சி முறைக்கு எதிராகவும் அமைந்துள்ளது. எனவே ராயகிரி பேரூராட்சித் தலைவர் பதவியை பொது பிரிவிற்கு கொடுக்க வேண்டுமென  மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் உள்ளாட்சி பேரூராட்சி தேர்தல் ஆணையாளருக்கு அனைத்துக் கட்சி பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory