» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ரேஷன் கடையில் தரமற்ற அரிசி விநியோகம்: பெண்கள் திடீர் சாலை மறியல் போராட்டம்!

வெள்ளி 21, ஜனவரி 2022 10:20:19 AM (IST)



ஆலங்குளம் அருகே ரேஷன் கடையில் தரமற்ற அரிசி வழங்கப்படுவதாக கூறி  பெண்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே புதுப்பட்டி கிராமத்தில் ரேஷன் கடை உள்ளது. இங்கு 1000-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் உள்ளன. அம்பேத்கர் நகரை சேர்ந்த பெண்கள் ரேஷன் பொருட்கள் வாங்க வந்தனர். இதில் தங்களுக்கு வினியோகம் செய்யப்படும் அரிசி மட்டும் தரமற்றதாக உள்ளதாக கூறி கடை ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

பின்னர் திடீரென ஆலங்குளம் - முக்கூடல் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆலங்குளம் போலீசார் வந்து  பெண்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் ரேஷன் பொருட்கள் வருவாய் ஆய்வாளர் பேச்சி, புதுப்பட்டி வருவாய் ஆய்வாளர் சுப்பிரமணியன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 

அவர்களிடம் தங்களுக்கு தரமற்ற அரிசி வழங்கப்படுவதாக முறையிட்டனர். இதுகுறித்து கேட்ட அதிகாரிகள் தரமான அரிசி வினியோகம் செய்ய ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர். அதன்பேரில் சாலை மறியலை பெண்கள் கைவிட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory