» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பாவூர்சத்திரத்தில் ரூ.4.5 கோடியில் ரயில்வே மேம்பாலம்: டெண்டர் அறிவிப்பு

சனி 19, பிப்ரவரி 2022 8:24:47 PM (IST)

பாவூர்சத்திரத்தில் ரூ.4.5 கோடி செலவில் ரயில்வே மேம்பாலம் கட்ட டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.

திருநெல்வேலி-தென்காசி இடையே நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இச்சாலையில் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் ரயில்வே கிராசிங் உள்ளது. இச்சாலையில் எப்போதும் அதிகமான வாகனங்கள் சென்று வருகின்றன. கேரளாவிற்கு பாவூர்சத்திரம், ஆலங்குளம் ஆகிய பகுதிகளில் இருந்து தினசரி நூற்றுக்கணக்கான வாகனங்களில் காய்கறிகள் கொண்டு செல்லப்படுகின்றன. இந்த வாகனங்கள் அனைத்தும் இச்சாலை வழியேதான் சென்று வருகின்றன.

கொல்லத்திலிருந்து திருநெல்வேலிக்கு செங்கோட்டை, தென்காசி வழியாக இயக்கப்படும் ரயில்கள் அனைத்தும் பாவூர்சத்திரம் வழியேதான் சென்று வருகின்றன. மேலும் செங்கோட்டை-திருநெல்வேலி ரயில்களும் சென்று வருகின்றன. பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலும் இந்த வழித்தடத்தில்தான் சென்று வருகிறது. தற்போது பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் வாகன நெரிசல் மிகுந்த பாவூர்சத்திரத்தில் ரயில்வே மேம்பாலம் சுரங்கப்பாதை வசதியுடன் அமைக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தென்காசி, நெல்லை மாவட்டங்களைச் சேர்ந்த 227 கிராம பொதுமக்கள் பாவூர்சத்திரத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் திருநெல்வேலி-தென்காசி சாலையில் பாவூர்சத்திரத்தில் ரூ.4 கோடியே 48 லட்சத்து 53 ஆயிரத்து 954 செலவில் ரயில்வே மேம்பாலம் கட்ட ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இற்காக டெண்டர் அறிவிப்பை தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. ரயில்வே மேம்பால பணிகளை முடிக்க 9 மாதங்கள் கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வரும் மார்ச் 4ம் தேதிக்குள் டெண்டர் அனுப்பப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory