» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கல்குவாரி விபத்தில் இறந்தவர்களுக்கு ரூ.15 லட்சம் நிவாரணம்: முதல்வ‌ர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு

செவ்வாய் 17, மே 2022 12:39:03 PM (IST)

நெல்லை அருகே கல்குவாரி விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு 15 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே உள்ள அடைமிதிப்பான் குளத்தில் தனியார்  குவாரியில் கடந்த 14ம் தேதி இரவு 400 அடி ஆழத்தில் கற்களை ஏற்றிக்கொண்டிருந்தபோது ராட்சத பாறை உருண்டு விழுந்தது. இதில் பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த 6 தொழிலாளர்கள் பாறைகளின் இடிபாடுகளில் சிக்கினர்.

இந்த விபத்தில் இதுவரை 2 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பத்திற்கு 15 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசு சார்பாக ரூ.10 லட்சமும், தொழிலாளர் நல வாரியம் சார்பாக ரூ.5 லட்சமும் நிவாரணம் வழங்கப்படும் என ஸ்டாலின் கூறியுள்ளார்.  விபத்து நடந்த இடத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் மூலமாக தீவிர மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.


மக்கள் கருத்து

திராவிட மாடல்மே 17, 2022 - 01:12:22 PM | Posted IP 162.1*****

இறந்துபோனவர்களுக்கு கொடுக்கத்தெரிந்த அரசுக்கு படித்து வேலையில்லாமல் பல லட்ச இளைஞர்களுக்கு கொடுக்கத் தெரியாது..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory