» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தென்காசி கல்வி மாவட்டத்தில் ஆக்ஸ்போர்டு பள்ளி முதலிடம்: 12ம் வகுப்பு தேர்வில் சாதனை!
செவ்வாய் 21, ஜூன் 2022 11:44:14 AM (IST)

தென்காசி கல்வி மாவட்ட அளவில் 12ம் வகுப்பு தேர்வில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதலிடம் பெற்றுள்ளது.
தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு தேர்வு எழுதிய 101 மாணவ, மாணவிகளும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றது. இப்பள்ளி மாணவர் இரா .அஜய்குமார் 600 மதிப்பெண்களுக்கு 591 மதிப்பெண்கள் பெற்று பள்ளி மற்றும் தென்காசி கல்வி மாவட்டத்தில் முதலிடம் பெற்றார். இவர் பாட வாரியாக பெற்ற மதிப்பெண்கள் வருமாறு: தமிழ்-98, ஆங்கிலம்-95, இயற்பியல்-98, வேதியியல்-100, கணினி அறிவியல்-100, கணிதம்-100.
இப்பள்ளி மாணவி பெ.சுபாஷினி 588 மதிப்பெண்கள் பெற்று பள்ளி இரண்டாமிடம் பெற்றார். இவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் வருமாறு: தமிழ்-95, ஆங்கிலம்-96, இயற்பியல்-98, வேதியியல்-100, கணினி அறிவியல்-99, கணிதம்-100.
இப்பள்ளி மாணவி சை.லத்திபா இஹ்ஸானா 587 மதிப்பெண்கள் பெற்று பள்ளி மூன்றாமிடம் பெற்றார். இவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் வருமாறு: தமிழ்-98, ஆங்கிலம்-94, பொருளியல்-100, வணிகவியல்-100, கணக்கியல்-100, வணிக கணிதம்-95.
இப்பள்ளியில் வேதியியலில் 4 பேரும், கணினி அறிவியலில் 3 பேரும், கணிதத்தில் 2 பேரும், கணக்கியலில் 4 பேரும், வணிகவியலில் 3 பேரும், பொருளியலில் ஒருவரும், வணிக கணிதத்தில் 3 பேரும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
சாதனைபடைத்த மற்றம் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை சட்டக்கல்லூரி பேராசிரியர் முனைர் எம்.இ.டி.முகமது, பள்ளி சட்ட ஆலோசகரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞருமான கே.திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி இயக்குநர் வழக்கறிஞர் தி.மிராக்ளின் பால் சுசி, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை முனைவர் சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கே.எஸ்.கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை: தனியார் பள்ளி பஸ்கள் தீவைத்து எரிப்பு!
வெள்ளி 18, ஜூலை 2025 5:48:22 PM (IST)

அரசுப் பேருந்தில் ஏசி வேலை செய்யவில்லை என வழக்கு; அதிகாரிகள் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு!
வெள்ளி 18, ஜூலை 2025 5:11:40 PM (IST)

நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது!
வெள்ளி 18, ஜூலை 2025 4:26:47 PM (IST)

சட்டப்பணி ஆணைக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் : நீதிபதி பங்கேற்பு
வெள்ளி 18, ஜூலை 2025 11:36:25 AM (IST)

திருச்சி சிவா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் : தெக்ஷண மாற நாடார் சங்கம்
வியாழன் 17, ஜூலை 2025 4:51:08 PM (IST)

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது: சபாநாயகர் பேட்டி
வியாழன் 17, ஜூலை 2025 3:41:27 PM (IST)
