» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடியில் மகனை வெட்டிக் கொன்ற தந்தை : நீதிமன்றம் அருகே பட்டப்பகலில் பயங்கரம்!
செவ்வாய் 21, ஜூன் 2022 12:59:04 PM (IST)

தூத்துக்குடி நீதிமன்றம் எதிரே பட்டப்பகலில் வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் கவர்னகிரி, சுந்தரலிங்கம் நகரைச் சேர்ந்தவர் தமிழ் அழகன் (52). இவரது மகன் காசிராஜன் (35), லாரி டிரைவராக வேலைபார்த்து வந்தார். இவரது மனைவி மகாலட்சுமி குடும்ப பிரச்சனையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், காசி ராஜனுக்கும் அவரது தந்தைக்கும் இடையே சொத்துப் பிரச்னை காரணமாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
தந்தை தமிழ் அழகன் மீது காசிராஜன் தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் ஆஜராவதற்காக இன்று தமிழழகன் தனது உறவினர்கள் ஓட்டப்பிடாரம் சுந்தரலிங்க நகரை சேர்ந்த கடல்ராஜா (45), தூத்துக்குடி எட்டயபுரம் ரோடு ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்த காசிதுரை (31) ஆகியோருடன் தூத்துக்குடி நீதிமன்றத்திற்கு வந்தார். தமிழழகன் நீதிமன்றத்தில் ஆஜரான பின்னர், காரில் ஏற முயன்றபோது, அங்கு வந்த காசிராஜன், தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் தந்தை தமிழழகன், கடல்ராஜா, காசிதுரை ஆகிய 3 பேரையும் தாக்கினார்.
இதில் 3 பேருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக சுதாரித்துக் கொண்ட 3 பேரும் காசிராஜன் கையில் இருந்த அரிவாளை பிடுங்கி அவரை சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த காசிராஜன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும், காசிராஜன் வெட்டியதில் காயமடைந்த 3பேர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன், ஏஎஸ்பி சந்தீஸ், மத்தியபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து மகனை கொலை செய்ததாக தந்தை தமிழழகன், உறவினர்கள் கடல்ராஜா, காசிதுரை ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் நீதிமன்றம் அருகே நடந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் ரூ.100 கோடியில் மேம்பாட்டு பணிகள் விரைவில் தொடக்கம்!
திங்கள் 17, நவம்பர் 2025 8:43:56 AM (IST)

நெல்லையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் ருசிகரம் : தந்தையும் மகனும் தேர்வெழுதினர்!!
ஞாயிறு 16, நவம்பர் 2025 11:13:11 AM (IST)

மாநில வில் வித்தை போட்டி: வீரவநல்லூர் மாணவனுக்கு தங்கப்பதக்கம் வென்று அசத்தல்
ஞாயிறு 16, நவம்பர் 2025 11:09:21 AM (IST)

நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கு: சுர்ஜித் தாயாரை கைது செய்ய பிடிவாரண்ட்!
சனி 15, நவம்பர் 2025 12:44:52 PM (IST)

நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கோலாகலம் : திரளானோர் தரிசனம்!
சனி 15, நவம்பர் 2025 11:51:49 AM (IST)

கொலை முயற்சி, வழிப்பறியில் ஈடுபட்டவர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது!
வெள்ளி 14, நவம்பர் 2025 5:31:34 PM (IST)





mariappanJun 22, 2022 - 02:38:21 PM | Posted IP 162.1*****