» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஆலங்குளம் அருகே 15 வயது சிறுமி பாலியல் தொல்லை : வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை

புதன் 22, ஜூன் 2022 8:26:03 AM (IST)

ஆலங்குளம் அருகே 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த  வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்கைகுட்பட்ட பகுதியில் கடந்த 2018ஆம் ஆண்டு 15 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த முருகன் மகன் பிரவீன் குமார்(21) என்பவர் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அச்சிறுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் அப்போதைய ஆலங்குளம் துணை காவல் கண்காணிப்பாளர் ரமேஷ் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரவீன் குமாரை கைது சிறையில் அடைத்தார்.

இவ்வழக்கானது நெல்லை மகிளா நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் நேற்று வழக்கை விசாரணை செய்த நீதிபதி அன்பு செல்வி குற்றவாளியான பிரவீன் குமார்(21) என்பவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் 5000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.  வழக்கில் திறம்பட செயல்பட்ட அரசு வழக்கறிஞர் ஜெப ஜீவா மற்றும் ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored AdsTirunelveli Business Directory