» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சர்வதேச வீல் சேர் கூடைப்பந்து போட்டியில் வெற்றி : சாதனையாளர் விருது வீரருக்கு உற்சாக வரவேற்பு

புதன் 22, ஜூன் 2022 10:34:32 AM (IST)



வீல் சேர் கூடைப்பந்து போட்டியில் உலக அளவில் கலந்து கொண்டு வெற்றி பெற்று தமிழக ஆளுநரால் சாதனையாளர் விருது பெற்ற வீரர் லட்சுமணனுக்கு ஊர் மக்கள் சார்பில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
  
நெல்லை மாவட்டம் கொக்கிரகுளம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன். இவர் தனது 15வது வயதில் நண்பர்களுடன் சேர்ந்து விளையாடும் போது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து விடுகிறார். அப்போது அவர் முதுகில் அடிபட்டு முதுகில் இரண்டு கால்களும் செயல்படாமல் போய்விடுகிறது. இளம் வயதில் இரண்டு கால்களும் செயல் படாமல் வீல்சேர் மட்டும் தான் வாழ்க்கை என்று  இருந்த லக்ஷ்மணன் பின்னர் தன்னம்பிக்கையுடன் வாழ தொடங்குகிறார்

இவருடைய தன்னம்பிக்கைக்கு அமர் சேவா சங்கத்தின் தலைவர் ராமகிருஷ்ணன் காரணம் என்றும் தெரிவிக்கிறார். ஊனம் தடையல்ல, தான் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று துடித்த லட்சுமணன், வீல்சேர்  கூடைப்பந்து விளையாட்டை கற்றுக்கொடுக்கிறார்.பின்னர் மாவட்டம் மாநிலம் என்று இல்லாமல் இந்தியாவிற்காக தாய்லாந்து வரை சென்று வீல்சேர் கூடைப்பந்து போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று பல்வேறு பதக்கங்களை அவர் பெற்றுள்ளார்.

தமிழக அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு அவர் வாங்கிய பதக்கங்கள் ஏராளம். இவரது தன்னம்பிக்கையை பார்த்த அமர்சேவா சங்கம் இவருக்கு சாதனையாளர் விருது வழங்கி கவுரவித்தது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தென்காசியில் நடைபெற்ற அமர்சேவா சங்கத்தின் விழாவில் தமிழக ஆளுநர் ரவி அவர்கள் கையால் சாதனையாளர் விருதை லட்சுமணன் பெற்றார்.

இன்று  சொந்த ஊருக்குத் திரும்பிய அவருக்கு ஊர் மக்கள் சார்பில் வானவேடிக்கை மற்றும் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை லக்ஷ்மணனின் வெகுவாக பாராட்டினர் தான் இப்படி சாதனை செய்வதற்கு அமர்சேவா சங்கத்தின் தலைவர் ராமகிருஷ்ணன் ஒரு காரணம் என்றும் அவரை முன்னுதாரணமாக வைத்து தான் தான் விளையாட்டில் ஈடுபட்டதாகவும் பல்வேறு போட்டிகளில் இந்தியா சார்பில் தமிழகம் சார்பில் கலந்து கொண்டு தான் வெற்றி பெற்றதாகவும் தற்பொழுது ஊர் மக்கள் தமக்கு அளித்த வரவேற்பு மிகவும் மகிழ்ச்சி ஏற்படுத்தியதாகவும் லட்சுமணன் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் துணை ஆட்சியர் பணி நிறைவு சொக்கலிங்கம், பிஜேபியின் மாநிலச் செயலாளர் நெசவாளர் பிரிவு முருகப்பா, மருத்துவர் குணசேகரன், பாலயங்கோட்டை தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் வீரராஜ், நெல்லை கூட்டுறவு பேரங்காடி பொது மேலாளர் சிவராமகிருஷ்ணன், சேவாபாரதி சிவகாமி மற்றும் ஊர் மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory