» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

துனை மின் நிலையத்தில் அதிகாரி வெட்டிக் கொலை : மர்ம நபர்கள் வெறிச்செயல்!

புதன் 22, ஜூன் 2022 11:32:31 AM (IST)

நாசரேத் துணை மின்நிலையத்தில் ஆய்வாளர் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நெல்லை கே.டி.சி, நகரைச் சேர்ந்தவர் பூலோகபாண்டி மகன் ஆனந்தபாண்டி (51). இவர் தூத்துக்குடி மாவட்டம், நாசரேத்தில் உள்ள துனை மின் நிலையத்தில் லைன் இன்ஸ்பெக்டராக வேலைபார்த்து வருகிறார். நேற்று அவர் இரவு பணியில் இருந்துள்ளார். இந்நிலையில், இன்று காலையில் பூமிநாதன் என்பவர் பணிக்கு வந்துள்ளார். அப்போது ஆனந்தபாண்டி அறையில் படுகொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பூமிநாதன் நாசரேத் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். 

இதையடுத்து இன்ஸ்பெக்டர் பட்டாணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ஆனந்த பாண்டியின் தலை, முதுகு உட்பட உடலில் பல இடங்களில் வெட்டுக் காயங்கள் இருந்தது. அவரை மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது. அவரை கொலை செய்தவர்கள் யார்? கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது உடல் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவ இடத்தை சாத்தான்குளம் டிஎஸ்பி அருள் நேரில் பார்வையிட்டார். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து

NameJun 23, 2022 - 08:54:16 AM | Posted IP 162.1*****

Thothukudi sp ithalam pakurara ilaya

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory