» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடியில் பிரதான சாலையில் பணிகள் நிறைவு : இன்று இரவு பயன்பாட்டிற்கு வருகிறது!

புதன் 22, ஜூன் 2022 12:41:17 PM (IST)



தூத்துக்குடியில் காய்கறி மார்க்கெட் - பாலவிநாயகர் கோவில் தெரு சந்திப்பு பகுதியில் உள்ள சாலைப் பணிகள் நிறைவு பெற்று  இன்று இரவு பயன்பாட்டிற்கு வருகிறது. 

தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல இடங்களில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதுபோல் பால விநாயகர் கோவில் தெரு, காய்கறி மார்க்கெட் சிக்னல், தேவர்புரம் ரோடு தொடர்ச்சி ஆகிய பகுதிகளில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் பள்ளிகள், கல்லூரிகள், மார்க்கெட் போன்றவை இயங்கி வருகின்றன. சாலைப் பணிகள் காரணமாக அப்பகுதியில் ஒருபுறத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. 

எனவே, மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக ஆய்வு செய்து இந்த சாலையை திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், இந்த சாலைப் பணி்களை நேற்று இரவு மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார். மேலும், பாலவிநாயகர் கோவிலில் இருந்து  சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் தெற்கு காவல் நிலையம் வரை செல்லும் சாலைப்பணி நிறைவு பெற்றதால் இன்று இரவு முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வருகிறது என தூத்துக்குடி மாநகராட்சி மேயர் அறிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

kumarJun 23, 2022 - 02:18:27 PM | Posted IP 108.1*****

konjam vegamaga velayai parkka sollungal....thoothukudi muluvathum road padu mosam.

OhooJun 23, 2022 - 08:57:24 AM | Posted IP 162.1*****

Road makkal nadakkava ila parotta kada kran adupu vaika ivanuga road potu kudukuranugala

KANNANJun 22, 2022 - 04:43:15 PM | Posted IP 162.1*****

No.1 3RD MILE ROAD VIRIVAAKKAM No.2 VVD SIGNAL MEMBALAM No.3 ORUNGINAITHA NEW BUSSTAND EPPO PAYANPATTUKKU VARUM? IF ANY PROBLEM IN THIS,PLEASE CALL MR.AASHISHKUMAR SIR AND DISCUSS PLEASE.

என்னதுJun 22, 2022 - 04:38:22 PM | Posted IP 162.1*****

புது உருட்டா இருக்கே. ரோட்டில் அங்கங்கே மணல் கொட்டி இருக்கே அப்புறப்படுத்துங்கள்

PSCCJun 22, 2022 - 03:56:29 PM | Posted IP 162.1*****

nallathu nadakkatum. natappathu nanmaikke

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory