» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பத்திர எழுத்தரை வெட்டிக் கொல்ல முயன்றவர் கைது

வியாழன் 23, ஜூன் 2022 8:36:08 AM (IST)

சாத்தான்குளத்தில் தொழில் போட்டியில் ஆவண எழுத்தரை அரிவாளால் வெட்ட முயன்றவரை போலீசார் கைது செய்தனர். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வடக்கு ரத வீதியைச் சோ்ந்த சுடலைமுத்து மகன் ஞானமூா்த்திசதீஷ் (25). இவா் 4 ஆண்டுக்கு முன்பு சாத்தான்குளம் வடக்கு மாடவீதியைச் சோ்ந்த ஆவண எழுத்தா் சி. அழகப்பனிடம் உதவியாளராக இருந்தாராம். பின்னா், அவரை விட்டுப் பிரிந்து அதே பகுதியில் தனது சகோதரா் விக்னேஷுடன் இணைந்து பத்திரம் எழுதும் தொழில் செய்து வந்தாா். அவா் நடத்திவரும் கடையை காலி செய்யுமாறு கடை உரிமையாளரிடம் அழகப்பன் கூறி வந்தாராம். 

இதனால், இருவரிடையே முன்விரோதம் இருந்து வந்ததாம். இந்நிலையில், நேற்று முன்தினம் கடையிலிருந்த ஞானமூா்த்தி சதீஷை, அழகப்பன் தூண்டுதலின் பேரில் சாத்தான்குளம் மாதாங்கோயில் தெருவைச் சோ்ந்த கணபதி மகன் முத்துராமலிங்கம் (51), அரிவாளால் வெட்ட முயன்றாராம். ஞானமூா்த்தி சதீஷ் கூச்சலிடவே அப்பகுதியினா் திரண்டனா். இதையடுத்து அவருக்கு முத்துராமலிங்கம் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பியோடிவிட்டாராம். புகாரின் பேரில் சாத்தான்குளம் உதவி ஆய்வாளா் ஜான்சன் வழக்குப் பதிந்து, முத்துராமலிங்கத்தை நேற்று கைது செய்தாா்.


மக்கள் கருத்து

sejhfkJun 23, 2022 - 11:06:27 AM | Posted IP 162.1*****

veliya vidaatheenga naaya

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored AdsTirunelveli Business Directory