» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த கும்பல் : சிறுவன் உள்பட 4 பேருக்கு வலைவீச்சு!
வெள்ளி 24, ஜூன் 2022 11:36:09 AM (IST)
நெல்லை அருகே காட்டுப் பகுதியில் பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த விவகாரத்தில் சிறுவன் உள்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள ஒரு கிராமத்து பகுதியில் 38 வயதான பெண் ஒருவர் கணவர், குழந்தையுடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று அந்த பெண் அங்குள்ள காட்டுப் பகுதிக்கு விறகு வெட்டுவதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் திடீரென அந்த பெண்ணை அடர்ந்த காட்டுப்பகுதிக்கு தூக்கி சென்று பலாத்காரம் செய்துள்ளனர்.
மேலும் அந்த கும்பலில் ஒருவர் அதனை செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அந்த வீடியோவை பார்த்து ரசித்ததோடு அதனை தனது சக நண்பர்களுக்கும் அனுப்பி உள்ளார். அவரது நண்பர்கள் அந்த வீடியோவை மேலும் சிலருக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்கள் மூலம் அப்பகுதியில் வேகமாக பரவி உள்ளது.
இதற்கிடையே, நடந்த சம்பவங்கள் குறித்து அந்த பெண் திசையன்விளை போலீசில் புகார் செய்தார். மேலும், தன்னை கூட்டு பலாத்காரம் செய்த கும்பல் அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளதாகவும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகாரில் கூறி இருந்தார்.இதைத்தொடர்ந்து பெண் புகாரின் பேரில் இந்திய தண்டனை சட்டம் 376(பி) பிரிவின் கீழ் இன்ஸ்பெக்டர் செல்வி, வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் அந்த பெண்ணை கற்பழித்த இட்டமொழி பகுதியை சேர்ந்த நாகலிங்கம் (23) என்பவர் சிக்கினார். விசாரணையில் அவரும், அவரது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த மணி (20), கதிர் (24) மற்றும் 18 வயது, 16 வயதுடைய 2 சிறுவர்கள் என 5 பேர் சேர்ந்து அந்த பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து நாகலிங்கத்தை போலீசார் கைது செய்தனர். மற்ற 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த கும்பல் இதற்கு முன்பு இது போல வேறு பெண்களை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்துள்ளார்களா? எனவும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நேற்று நெல்லை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடந்தது. மேலும் அவருக்கு மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்படுகிறது என போலீசார் தெரிவித்தனர்.
குறிப்பிட்ட வாலிபர் ஒருவர் தான் தனது சக நண்பர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் அந்த வீடியோ காட்சிகளை அனுப்பி உள்ளார். அவர் யார்-யாருக்கெல்லாம் வீடியோவை அனுப்பினார்? என விசாரணை நடத்திய போலீசார் சம்பந்தப்பட்டவர்களின் செல்போனில் இருந்து அந்த காட்சிகளை அழித்தனர். பெண்ணை கும்பல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பிய இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குழந்தைகள் இல்லத்தில் கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பலி: முதல்வர் நிவாரணம் அறிவிப்பு
வியாழன் 10, ஜூலை 2025 5:06:20 PM (IST)

படகுகளில் தவெக பெயர் இருந்தால் மானியம் மறுப்பதா? திமுக அரசுக்கு விஜய் கண்டனம்!
வியாழன் 10, ஜூலை 2025 3:50:04 PM (IST)

புனித பயணம் மேற்கொள்ள தமிழக அரசு நிதி உதவி : விண்ணப்பங்கள் வரவேற்பு
வியாழன் 10, ஜூலை 2025 3:15:25 PM (IST)

நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயிலில் திடீர் புகை: பயணிகள் அதிர்ச்சி!
புதன் 9, ஜூலை 2025 11:16:50 AM (IST)

நாங்குநேரி உட்பட 4 சுங்கச் சாவடிகளில் அரசு பஸ்களுக்கு தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு
புதன் 9, ஜூலை 2025 10:27:39 AM (IST)

வீடு புகுந்து மூதாட்டியை கொன்று 14 பவுன் நகை கொள்ளை: மர்மநபர்கள் வெறிச்செயல்
புதன் 9, ஜூலை 2025 9:02:53 AM (IST)
