» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பள்ளி மாணவி கர்ப்பம்: ஆசிரியரிடம் விசாரணை!

வெள்ளி 24, ஜூன் 2022 12:29:24 PM (IST)

தென்காசி அருகே பள்ளி மாணவி கர்ப்பமானது குறித்து ஆசிரியரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் நேற்று முன்தினம் திடீரென வாந்தி எடுத்துள்ளார். உடனே அவரை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மாணவியை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

"இந்த மாணவி பாவூர்சத்திரத்தில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2019-ம் ஆண்டு 10-ம் வகுப்பு படித்து உள்ளார். அப்போது அங்கு பணியாற்றி வந்த தென்காசி பகுதியை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் மாணவியை அடிக்கடி பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் மாணவியின் சொந்த ஊரை சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவரும் அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுதொடர்பாக தென்காசி ஆசிரியரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவான கூலி தொழிலாளியை தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து

JOSEPH KANAGARAJJun 25, 2022 - 10:48:57 AM | Posted IP 162.1*****

Very delicate situation. Whose responsible? teacher or Cooli Worker

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory