» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்: டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் உத்தரவு

சனி 25, ஜூன் 2022 4:09:57 PM (IST)

கரிவலம்வந்தநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்து   டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் உத்தரவிட்டார்.

தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் சங்கரநாராயணன். இவர் மீது வாகன சோதனையின் போது ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு முடிவடையாமல் உள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பாக தென்காசி மாவட்ட போலீஸ் எஸ்பி கிருஷ்ணராஜ் நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. அலுவலகத்துக்கு பரிந்துரை செய்தார்.

இதையடுத்து சங்கரநாராயணனை பணியிடை நீக்கம் செய்து நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் நேற்று உத்தரவிட்டார். இந்த மாத இறுதியில் சங்கரநாராயணன் ஓய்வு பெற இருந்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory