» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

குற்றாலம் ஐந்தருவியில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்...!

சனி 25, ஜூன் 2022 5:00:53 PM (IST)குற்றாலம் ஐந்தருவியில் ஆர்பரித்து கொட்டிய தண்ணீரில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மீண்டும் சீசன் களைகட்ட தொடங்கியது. கடந்த சில நாட்களாக அனைத்து அருவிகளிலும் மிக குறைவான அளவில் தண்ணீர் விழுந்தது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் குறைவாக இருந்தது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்ததின் அடிப்படையில் இன்று காலை முதல் மேற்கு தொடர்ச்சிமலைப்பகுதிகளில் மழை பெய்தது.

இதனால் இன்று காலை முதல் ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும் தண்ணீர் விழுகிறது. அவற்றில் சுற்றலா பயணிகள் ஆனந்த குளியில் போட்டனர். ஆனால் குற்றாலம் மெயின் அருவியில் தற்போது குறைந்த அளவு தண்ணீர் விழுகிறது. விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை மிகவும் குறைவாகவே காணப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory