» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

குற்றாலம் சாரல் திருவிழா: நாட்டுப்புறக் கலைஞர்களை உற்சாகப்படுத்திய ஆட்சியர்!

செவ்வாய் 9, ஆகஸ்ட் 2022 10:41:46 AM (IST)



குற்றாலம் சாரல் திருவிழாவில் நாட்டுப்புறக் கலைஞர்களுடன் நடனமாடி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அவர்களை உற்சாகப்படுத்தினார்.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கடந்த 5ம் தேதி  சாரல் திருவிழா துவங்கி நடைபெற்று வருகிறது. விழா வரும் 12ம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவில் தினமும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அவற்றில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. விழாவின் நான்காம் நாளான நேற்று ஐந்தருவி வெண்ணமடைகுளம் படகு குழாமில் படகுப் போட்டி நடைபெற்றது.

இப்போட்டியை தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ் துவக்கி வைத்தார். இந்நிலையில், இன்று குற்றாலம் சாரல் திருவிழாவில் நடைபெற்ற நாட்டுப்புறக் கலைஞர்களின்  கரகாட்டத்தை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் கண்டு ரசித்தார். மேலும் கலைஞர்களின் கோரிக்கையை ஏற்று ஆட்சியர் தனது தலையில் கரகம் வைத்து அவர்களை உற்சாகப்படுத்தினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory