» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மேலப்பாளையம் சந்தையில் ஆடுகள் விற்பனை ஜோர்: செங்கிடா ரூ.23 ஆயிரத்துக்கு விற்பனை
செவ்வாய் 9, ஆகஸ்ட் 2022 4:59:42 PM (IST)
மேலப்பாளையம் சந்தையில் கொம்பு அதிக நீளம் கொண்ட செங்கிடாக்கள் ரூ.23 ஆயிரம் முதல் ரூ.26 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.
நெல்லை மேலப்பாளையத்தில் டக்கரம்மாள்புரம் சாலையில் மாநகராட்சி கால்நடை சந்தை அமைந்துள்ளது. இந்த சந்தையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை வியாபாரிகள், பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். நெல்லை மட்டுமல்லாது அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் ஆடு, கோழி, கருவாடு உள்ளிட்டவற்றை விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கம்.
முக்கிய விழா காலங்களில் ஆடுகள் விலை எதிர்பாராததை விட அதிகமாக இருக்கும். தற்போது ஆடி மாதம் என்பதால் ஏராளமான கிராமங்களில் கோவில் கொடைகள் நடைபெற்று வருகிறது. இதில் பக்தர்கள் தங்களது நேர்த்தி கடன்களை நிறைவேற்றுவதற்காக ஆடுகளை அதிக அளவில் வாங்கி செல்கின்றனர். இதையொட்டி இன்று மேலப்பாளையம் சந்தைக்கு நெல்லை மாவட்டம் மற்றும் தென்காசி, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.
ஆடுகளின் விலை ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரம் புதுவரவாக கராச்சி ஆடுகள் விற்பனைக்கு வந்தன. 30 கிலோ எடை கொண்ட அந்த வகை ஆடுகள் ரூ.19 ஆயிரம் வரையிலும் விற்பனையானது. செங்கிடா, கருங்கிடா உள்ளிட்டவைகளும் சந்தைக்கு வந்திருந்தன. கொம்பு அதிக நீளம் கொண்ட செங்கிடாக்கள் ரூ.23 ஆயிரம் முதல் ரூ.26 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. மேலப்பாளையம் சந்தை
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயிலில் திடீர் புகை: பயணிகள் அதிர்ச்சி!
புதன் 9, ஜூலை 2025 11:16:50 AM (IST)

நாங்குநேரி உட்பட 4 சுங்கச் சாவடிகளில் அரசு பஸ்களுக்கு தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு
புதன் 9, ஜூலை 2025 10:27:39 AM (IST)

வீடு புகுந்து மூதாட்டியை கொன்று 14 பவுன் நகை கொள்ளை: மர்மநபர்கள் வெறிச்செயல்
புதன் 9, ஜூலை 2025 9:02:53 AM (IST)

நெல்லையப்பர் கோயில் ஆனித்திருவிழா தேரோட்டம்: திருநெல்வேலியில் கோலாகலம்
செவ்வாய் 8, ஜூலை 2025 11:39:30 AM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை; முதியவருக்கு ஆயுள் தண்டனை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 8, ஜூலை 2025 7:53:08 AM (IST)

மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ரூ.18.66 இலட்சம் நலதிட்ட உதவிகள்: ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 7, ஜூலை 2025 5:04:07 PM (IST)
