» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த வாலிபர் உடல் உறுப்புகள் தானம்
புதன் 14, செப்டம்பர் 2022 12:41:53 PM (IST)
சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த சங்கரன்கோவில் வாலிபர் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த 31 வயது வாலிபர் ஒருவர் சாலை விபத்தில் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அந்த வாலிபர் மூளைச்சாவு அடைந்தார். இதனைத் தொடர்ந்து மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகளை தானமாக வழங்குவது குறித்து அவரது உறவினர்களிடம் மருத்துவர்கள் பேச்சுவார்த்தை நடத்தனர்.
அதை ஏற்று அவர்கள் வாலிபர் உடல் உறுப்பு களை தானம் தர ஒப்புக் கொண்டனர். வாலிபரின் உடலில் இருந்து கல்லீரல், ஒரு சிறுநீரகம் மற்றும் கண் விழிகள், எடுக்கப்பட்டது. முன்னுரிமை அடிப்படையில் வெளி மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு கல்லீரல் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டது. நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவருக்கு வாலிபரின் சிறுநீரகம் பொருத்தப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் அந்த வாலிபர் நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டதில் உரிய முறையில் அறுவை சிகிச்சைகளை மருத்துவமனையில டீன் ரவிச்சந்திரனின் வழிகாட்டுதல் படி கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சையில் ஈடுபட்ட மயக்கவியல் துறை மருத்துவர்கள், சிறுநீரக துறை மருத்துவர்கள், நரம்பியல், சிறுநீரக அறுவைசிகிச்சை துறை மருத்துவர்கள் ஆகிய 4 துறை மருத்துவர்களுக்கு டீன் ரவிச்சந்திரன் பாராட்டு தெரிவித்துள்ளார்