» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நாங்குநேரியில் இரட்டை ரயில் பாதை இணைப்பு பணி: ரயில் சேவையில் மாற்றங்கள் அறிவிப்பு

வியாழன் 15, செப்டம்பர் 2022 5:43:30 PM (IST)

திருவனந்தபுரம் கோட்டத்தில் வள்ளியூர் - நாங்குநேரி ரயில் நிலையங்களுக்கிடையே இரட்டை ரயில் பாதை இணைப்பு பணிகள் நடைபெற இருக்கின்றன. 

இதன் காரணமாக செப்டம்பர் 19 முதல் செப்டம்பர் 27 வரை தாம்பரத்திலிருந்து புறப்பட வேண்டிய தாம்பரம் - நாகர்கோவில் அந்தியோதயா ரயில் (20691) மற்றும் செப்டம்பர் 20 முதல் செப்டம்பர் 28 வரை நாகர்கோவிலில் இருந்து புறப்பட வேண்டிய நாகர்கோவில் தாம்பரம் அந்தியோதயா ரயில் (20692) ஆகியவை திருநெல்வேலி - நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். 

இதே போல செப்டம்பர் 20 முதல் செப்டம்பர் 28 வரை திருச்சி - திருவனந்தபுரம் - திருச்சி இன்டர்சிட்டி ரயில்கள் (22627/22628) திருநெல்வேலி - திருவனந்தபுரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். மேலும் செப்டம்பர் 23 அன்று சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் வாராந்திர விரைவு ரயில் (12689) மற்றும் செப்டம்பர் 25 அன்று நாகர்கோவிலில் இருந்து புறப்பட வேண்டிய நாகர்கோவில் - டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் வாராந்திர விரைவு ரயில் (12690) ஆகியவை திருநெல்வேலி நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.

செப்டம்பர் 25 அன்று புதுச்சேரியில் இருந்து புறப்பட வேண்டிய கன்னியாகுமரி வாராந்திர விரைவு ரயில் (16861) மற்றும் செப்டம்பர் 26 அன்று கன்னியாகுமரியில் இருந்து புறப்பட வேண்டிய புதுச்சேரி வாராந்திர விரைவு ரயில் (16862) ஆகியவை திருநெல்வேலி - கன்னியாகுமரி இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். செப்டம்பர் 25 அன்று நாகர்கோவில் - திருநெல்வேலி (06641) திருநெல்வேலி - தூத்துக்குடி - திருநெல்வேலி ரயில்கள் (06668/06667) முழுமையாக ரத்து செய்யப்படும். செப்டம்பர் 26 அன்று திருநெல்வேலி - நாகர்கோயில் விரைவு ரயில் (06642) முழுமையாக ரத்து செய்யப்படும்.

இரட்டை ரயில் பாதை பணிகளின் ஒரு பகுதியாக நாகர்கோவில் - எரணியல் இடையே உள்ள பாலங்களை மாற்றி அமைக்கும் பணி நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக செப்டம்பர் 19, 22, 26, 29 ஆகிய நாட்களில் மதுரையில் இருந்து புறப்பட வேண்டிய மதுரை - புனலூர் விரைவு ரயில் (16729) மற்றும் செப்டம்பர் 20, 23, 27, 30 ஆகிய நாட்களில் புனலூரில் இருந்து புறப்பட வேண்டிய புனலூர் - மதுரை விரைவு ரயில் (16730) முழுமையாக ரத்து செய்யப்படும்" என தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory