» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லை - தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் மீண்டும் இயக்கம்
ஞாயிறு 18, செப்டம்பர் 2022 12:33:25 PM (IST)
நெல்லை - தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் இன்று18-ந் தேதி முதல் மீண்டும் இயக்கப்படுகிறது.
நெல்லை சந்திப்பில் இருந்து தென்காசி வழியாக தாம்பரம் மற்றும் மேட்டுப்பாளையம் செல்லும் சிறப்பு ரயில்களுக்கு கூட்டம் நிரம்பி வழிந்தது. இதில் நெல்லை -மேட்டுப்பாளையம் ரயில் மேலும் 5 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. அதைப்போல் தற்போது நெல்லை -தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயிலும் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
நெல்லை சந்திப்பில் இருந்து இந்த ரயில் இன்று 18-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.20 மணிக்கு புறப்பட்டு செல்கிறது. நெல்லை - தாம்பரம் வாராந்திர சிறப்பு கட்டண ரயில் (06004) 18-ந் தேதி முதல் வருகிற ஜனவரி மாதம் 29-ந் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.20 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.
மறு மார்க்கத்தில் தாம்பரம் - நெல்லை வாராந்திர சிறப்பு ரயில் (06003) தாம்பரத்திலிருந்து நாளை முதல் ஜனவரி மாதம் 30-ந் தேதி வரை திங்கட்கிழமைகளில் இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.40 மணிக்கு நெல்லை வந்து சேரும்.
இந்த சிறப்பு ரயில்கள் சேரன்மாதேவி, அம்பை, கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு ரெயில் நிறுத்தங்களில் நின்று செல்லும்.
இந்த சிறப்பு ரயில்கள் தட்கல் கட்டணத்துடன், அதாவது 1.3 மடங்கு அதிக கட்டணத்துடன் இயக்கபட்டாலும் பயணிகளிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இந்த இரு சிறப்பு ரயில்கள் மூலமாக இந்த 3 மாதங்களில் ரூ.2.5 கோடிக்கும் மேல் வருமானம் கிடைத்து உள்ளது.
எனவே வருமானம் கொழிக்கும் இந்த வழித்தடத்தில் தற்போது இயக்கப்படும் நெல்லை -மேட்டுப்பாளையம், நெல்லை -தாம்பரம் ரயில்களை நிரந்தரமாக இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குடும்பத் தகராறில் பெற்ற தாயை உயிரோடு எரித்துக் கொன்ற மகன்: நெல்லை அருகே பயங்கரம்!
ஞாயிறு 12, ஏப்ரல் 2026 9:03:40 AM (IST)

திமுகவின் வெற்றிக்கு வழிவகுக்கவே விஜய் களமிறங்கியுள்ளார் : நயினார் நாகேந்திரன்
சனி 11, ஏப்ரல் 2026 5:47:26 PM (IST)

நெல்லையில் 15 நாட்கள் கோடைகால விளையாட்டுப் பயிற்சி முகாம்: ஏப்ரல் 17-ல் தொடக்கம்!
சனி 11, ஏப்ரல் 2026 5:13:32 PM (IST)

த.வெ.க வேட்பாளருக்கு ஆதரவாக மேடை ஏறும் ராமராஜன்: அதிமுக-வில் சலசலப்பு!
சனி 11, ஏப்ரல் 2026 11:51:50 AM (IST)

நாங்குநேரி தொகுதி: பறக்கும் படை பணிகளைப் பொது பார்வையாளர் ஸ்ரீ வஷ்தவா ஆய்வு!
சனி 11, ஏப்ரல் 2026 11:41:35 AM (IST)

திமுக, அதிமுக-வுக்கு ஆதரவு இல்லை: புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி திட்டவட்டம்!
சனி 11, ஏப்ரல் 2026 11:15:50 AM (IST)

