» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நண்பனை கத்தரிக்கோலால் குத்தியவர் கைது
செவ்வாய் 20, செப்டம்பர் 2022 10:25:27 AM (IST)
கீழப்பாவூர் அருகே நண்பரை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூர் இல்லத்து பிள்ளைமார் கோவில் தெருவை சேர்ந்தவர் சாமி (33). கட்டிட தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் சாஸ்தா (36). நண்பர்களான இவரும் கட்டிட வேலை செய்து வருகின்றனர்.
மாலையில் வேலை முடிந்து இருவரும் வீடு திரும்பும்போது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில் சாமி கத்தரிக்கோலால் சாஸ்தாவை குத்தியுள்ளார். இதில் அவருக்கு பல இடங்களில் காயம் ஏற்பட்டது. உடனே அவர் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாமியை கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குழந்தைகள் இல்லத்தில் கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பலி: முதல்வர் நிவாரணம் அறிவிப்பு
வியாழன் 10, ஜூலை 2025 5:06:20 PM (IST)

படகுகளில் தவெக பெயர் இருந்தால் மானியம் மறுப்பதா? திமுக அரசுக்கு விஜய் கண்டனம்!
வியாழன் 10, ஜூலை 2025 3:50:04 PM (IST)

புனித பயணம் மேற்கொள்ள தமிழக அரசு நிதி உதவி : விண்ணப்பங்கள் வரவேற்பு
வியாழன் 10, ஜூலை 2025 3:15:25 PM (IST)

நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயிலில் திடீர் புகை: பயணிகள் அதிர்ச்சி!
புதன் 9, ஜூலை 2025 11:16:50 AM (IST)

நாங்குநேரி உட்பட 4 சுங்கச் சாவடிகளில் அரசு பஸ்களுக்கு தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு
புதன் 9, ஜூலை 2025 10:27:39 AM (IST)

வீடு புகுந்து மூதாட்டியை கொன்று 14 பவுன் நகை கொள்ளை: மர்மநபர்கள் வெறிச்செயல்
புதன் 9, ஜூலை 2025 9:02:53 AM (IST)
