» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பசுமாட்டை வெட்டியவருக்கு போலீஸ் வலைவீச்சு!

செவ்வாய் 20, செப்டம்பர் 2022 10:40:31 AM (IST)

கடையம் அருகே பசுமாட்டை வெட்டியவரை போலீசார் தேடி வருகின்றனர்.

தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள ராமலிங்கபுரத்தைச் சேர்ந்த மார்க் மெஞ்ஞானம் என்பவருடைய மகன் ஜேக்கப் சாமுவேல். இவர் கோழிப் பண்ணையும் மற்றும் இரண்டு மாடுகளை வைத்தும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இவரது ஒரு பசு மாட்டை காணவில்லை. 

பல இடங்களில் தேடியும் மாட்டை கண்டுபிடிக்கவில்லை இந்நிலையில் நேற்று காணாமல் போன பசு மாட்டின் குதிங்கால் வெட்டப்பட்டு ரத்தம் ஒழுக வீட்டிற்கு வந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஜேக்கப் சாமுவேல், இதுபற்றி கடையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரணை செய்து பசுமாட்டை வெட்டிய நபரை தேடி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory