» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மோட்டர்களை திருடிய 2 இளைஞர்கள் கைது

புதன் 21, செப்டம்பர் 2022 10:04:09 AM (IST)

பழைய குற்றாலத்தில் மின் மோட்டார்களை திருடிய 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம், குற்றாலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய குற்றாலம்  அருகில் அமைந்துள்ள  கோழி பண்ணையில் வைத்திருந்த சுமார் ரூபாய் 80,000 மதிப்பிலான 3 மோட்டார்களை அடையாளம் தெரியாத நபர்கள் திருடி சென்றுவிட்டனர். இதுகுறித்து அதன் உரிமையாளர் ராதாகிருஷ்ணன் குற்றாலம்  காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஆய்வாளர் தாமஸ் தலைமையில் சார்பு ஆய்வாளர் கோமதி நாதன் துரிதமாக விசாரணை மேற்கொண்டு மேற்படி மின் மோட்டார்களை திருடிய மேலகரம் பகுதியை சேர்ந்த சண்முகராஜ் என்பவரின் மகன் ரகு குமார்(23) மற்றும் மாரியப்பன் என்பவரின் மகன் முருகன் (25) ஆகிய இரண்டு நபர்கள்  கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி  சிறையில் அடைத்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory