» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மருத்துவ சமுதாயத்தை பழங்குடியினமாக அறிவிக்க வேண்டும்: மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை

புதன் 21, செப்டம்பர் 2022 10:23:17 AM (IST)

மருத்துவ சமுதாயத்தை பழங்குடியினமாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு மருத்துவ சமூக நலச்சங்க சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

குற்றாலத்தில் தமிழ்நாடு மருத்துவ சமூக நலச்சங்க மாநில பொதுக்குழு கூட்டம்  நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் நட்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ரவி வரவேற்று பேசினார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பொதுச்செயலாளர் ராஜன், பொருளாளர் குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இதனை தொடர்ந்து பொதுக்குழுவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

பின்னர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் மருத்துவ சமுதாயத்தினர் 80 லட்சம் பேர் உள்ளனர். சுதந்திரம் அடைந்ததில் இருந்து தற்போது வரை எங்கள் மக்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர். எனவே எங்கள் சமுதாயத்தை தாழ்த்தப்பட்ட சமூகமாக அறிவிக்க கோரிக்கை விடுத்தோம். அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை. 

அதனை தொடர்ந்து 5 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு அரசுக்கு கோரிக்கை விடுத்தோம். அதுவும் நிறைவேற்றப்படவில்லை. தற்போது பழங்குடியினமாக அறிவிக்க கோரிக்கை விடுத்துள்ளோம். அதனை அரசு நிறைவேற்றி தரவேண்டும்.  தற்போதைய தமிழக முதல்-அமைச்சர் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான கோவில்களில் முடி எடுக்கும் தொழிலாளிக்கு ரூ.5 ஆயிரம் என ஒப்பந்தம் செய்யப்படும் என்று அறிவித்தார். 

அது ஒரு நபருக்கு தான் கிடைக்கிறது. மற்ற தொழிலாளர்கள் பாதிப்படைகின்றனர். எனவே அதனை ரத்து செய்ய வேண்டும். பழைய நடைமுறையை அமல்படுத்த வேண்டும் அல்லது அனைத்து தொழிலாளர்களுக்கும் கிடைக்கும்படி பரிசீலனை செய்ய வேண்டும். செவிலியர் மற்றும் சித்த மருத்துவக் கல்லூரிகளில் எங்கள் சமூகத்திற்கு முன்னுரிமை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

கூட்டத்தில் தென்காசி மாவட்டத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட தலைவராக கடையநல்லூர் கே.ரவி, செயலாளராக குற்றாலம் கே. பண்டார சிவன், பொருளாளராக குற்றாலம் டி.எஸ். முருகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory