» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடியில் இஸ்லாமிய கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

திங்கள் 26, செப்டம்பர் 2022 8:15:53 AM (IST)

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தலைவர்களின் கைதை கண்டித்து தூத்துக்குடியில் இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகம் மற்றும் தலைவர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்கத்துறை சோதனை மற்றும் அதன் தலைவர்களின் கைதை கண்டித்தும், அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் தூத்துக்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மத்திய மாவட்ட செயலாளர் அகமது இக்பால் தலைமையில் இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பு சார்பில் தபால் தந்தி அலுவலகம் முன்பு  நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. 

ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் விடுதலை கழக மாநில பரப்புரை செயலாளர் பால் பிரபாகரன், ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட பொருளாளர் முகமது ஜான், எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட பொருளாளர் அஸ்ரப் அலி பைஜி, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட தலைவர் அப்துல்காதர், காங்கிரஸ் மாநில பேச்சாளர் அப்துல் மஜித்இ எஸ்.டி.பி.ஐ. கட்சி காதர் மைதீன் மற்றும் இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பு நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.  


மக்கள் கருத்து

PODHU JANAMSep 26, 2022 - 04:54:39 PM | Posted IP 162.1*****

anaithu vanmuraikku adharavanavarkalai bail il vara iyaladhapadi jail il thalla vendum. madhathin payaril thesa padhukappukku abaththu seibavarakalukku irakkam kaatta koodathu.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory