» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

போட்டி தேர்வுகளுக்கு தொடர்ந்து முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம் : ஆட்சியர் அறிவுரை

திங்கள் 26, செப்டம்பர் 2022 4:53:51 PM (IST)போட்டி தேர்வுகளுக்கு தொடர்ந்து முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம் என போட்டி தேர்வு பயிற்சி வகுப்பு தொடக்க விழாவில்  ஆட்சியர் செந்தில்ராஜ் பேசினார். 

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் அரசு போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ்,   இன்று தொடங்கி வைத்து பேசியதாவது: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. அதில் மக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக எழுதிக்கொடுப்பார்கள். 

ஆனாலும் உங்களை நேரில் பார்த்து பேசுவதற்காக வந்துள்ளேன். போட்டி தேர்வுகளில் எழுத்துக்தேர்வும் இருக்கலாம். நேர்காணலும் இருக்கலாம். உங்களை யார் கூப்பிட்டு பேசினாலும் பேச வேண்டும். அந்த திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். இரண்டாவதாக ஆளுமைத்திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். உங்களை அழைத்து பேசியதில் நீங்கள் வெற்றியடைவீர்கள் என்பது தெரிகிறது. நீங்கள் பல்வேறு போட்டி தேர்வுகளை எழுத வேண்டும். 

பி.எட் முடித்துவிட்டு ஆசிரியர் பணிக்குதான் செல்வேன் என்று இருக்கக்கூடாது. மத்திய அரசின் யு.பி.எஸ்.சி., தமிழக அரசின் டி.என்.பி.எஸ்சி., உள்ளிட்ட நிறைய போட்டி தேர்வுகள் உள்ளன. தேர்வுக்கு தயாராகும்போது நிறைய சிரமங்கள் வரலாம். வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் நடத்தப்படும் பயிற்சியின் மூலம்தான் நான் முதன்முதலாக தேர்வுக்கு தயாரானேன். நான் முதலில் தமிழக அரசின் சுகாதார அலுவலர் பணிக்கு தேர்வானேன். பள்ளியில் படிக்கும்போது ஒவ்வொருவருக்கும் ஒரு பாடம் பிடிக்கும். ஆனால் கல்லூரியில் அந்த பாடம் இருக்காது. 

போட்டி தேர்வுகளில் அனைத்து பாடங்களையும் படிக்க வேண்டும். நாங்கள் படிக்கும் காலத்தில் டெல்லிக்கு சென்று புத்தகங்கள் வாங்கினோம். ஆனால் இன்று ஆன்லைனில் அனைத்தும் கிடைக்கிறது. முதலில் எந்த வேலை கிடைத்தாலும் அதில் சேர்ந்து வேலை பார்த்துக்கொண்டே தொடர்;ந்து படிக்க வேண்டும். அனைவரும் கடினமாக உழைத்து வெற்றி பெற வாழ்த்துக்கள் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் பேச்சியம்மாள், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் சண்முகவேல், பயிற்சி அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து

dfgergrtfgSep 26, 2022 - 05:46:48 PM | Posted IP 162.1*****

great leader

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory