» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டது: சசிகலா புஷ்பா ஆவேச பேட்டி.
திங்கள் 26, செப்டம்பர் 2022 9:11:44 PM (IST)
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து இருப்பதாக தமிழக பாஜக துணைத் தலைவர் சசிகலா புஷ்பா குற்றம் சாட்டியுள்ளார்.

பயணிகளுக்கு எந்தவித பாதிப்பு ஏற்படவில்லை என்றாலும் இது பாரதிய ஜனதா கட்சியினரிடம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து இன்று தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கட்சியின் மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா கூறுகையில் "தமிழகத்தில் பல்வேறு இடங்களில் குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க காவல்துறை எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. குண்டு வைத்தவர்களை கண்டறிந்து கைது செய்யாமல் பாஜகவை சார்ந்த 119 பேர் மீது பொய்வழக்கு போட்டு கைது செய்துள்ளது கண்டனத்திற்குறியது.
தமிழகத்தில் பொது மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. பாஜக அனைத்து மதத்தினரையும் மதிக்கிறது. அரசியல் சாசனத்தின் மீது உறுதிமொழி எடுத்துக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் இந்து மத பெண்களுக்கு எதிரான கருத்துக்களை கூறியுள்ளார். அவர் மீது எந்தவித நடவடிக்கை எடுக்காதது ஏன்? இந்து தெய்வ நம்பிக்கை உள்ள பெண்களை கேவலமாக பேசி உள்ளது கண்டிக்கத்தக்கது. இதனை கண்டித்து விரைவில் பாஜக சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்தும். அனைத்து வீடுகளிலும் கருப்பு கொடியேற்றும் போராட்டம் நடத்தபடும் என்றார்.
பேட்டியின் போது மாவட்ட தலைவர் ஆர். சித்ராங்கதன், ஓபிசி அணி மாநில துணைத்தலைவர் விவேகம் ரமேஷ், மாவட்ட துணைத் தலைவர்கள் எஸ்பி வாரியார் சுவைதர், தங்கம், சிவராமன், மாவட்ட பொதுச் செயலாளர் சத்தியசீலன், மேற்கு மண்டல் பொதுசெயலாளர் சொக்கலிங்கம், தகவல் தொழில்நுட்ப பிரிவை சார்ந்த ஜெயகுமார், விருந்தோம்பல் பிரிவு பாலமுருகன், அரசு திட்டங்கள் பிரச்சார பிரிவு செல்வகுமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
truthSep 27, 2022 - 04:44:58 AM | Posted IP 162.1*****
yes, it was very obvious in your recent video.
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையப்பர் கோயில் ஆனித்திருவிழா தேரோட்டம்: திருநெல்வேலியில் கோலாகலம்
செவ்வாய் 8, ஜூலை 2025 11:39:30 AM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை; முதியவருக்கு ஆயுள் தண்டனை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 8, ஜூலை 2025 7:53:08 AM (IST)

மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ரூ.18.66 இலட்சம் நலதிட்ட உதவிகள்: ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 7, ஜூலை 2025 5:04:07 PM (IST)

வேலைவாய்ப்பு முகாமில் 5300 பேருக்கு பணிநியமன ஆணைகள் : சபாநாயகர், அமைச்சர்கள் வழங்கினர்!
சனி 5, ஜூலை 2025 5:44:29 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் 132 மையங்களில் 36,011 பேர் குரூப் 4 தேர்வு தேர்வு எழுதுகிறார்கள்!
வெள்ளி 4, ஜூலை 2025 5:51:49 PM (IST)

தொழில் முனைவோர் மேம்பாடு: இன்டர்ன்ஷிப் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்!
வெள்ளி 4, ஜூலை 2025 4:57:07 PM (IST)

ராமநாதபூபதிSep 27, 2022 - 10:23:31 AM | Posted IP 172.7*****