» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடி மாநகராட்சிப் பணிகளை மேயர் ஆய்வு
செவ்வாய் 27, செப்டம்பர் 2022 10:08:46 AM (IST)

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி 60 வார்டுகளில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்பணிகளை மழைகாலத்திற்குள் முடித்து மக்களின் பாதுகாப்பு போக்குவரத்து பாதிப்பு இல்லாமல் மாநகர பகுதிகளில் நெருக்கடிகள் இல்லாமல் வாகனங்கள் சென்று வருவதற்கு பல்வேறு பகுதிகளில் தேவையற்ற மற்றும் சிறிய பெரிய ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு புதிய போக்குவரத்து சாலைகளையும் மாநகராட்சி நிர்வாகம் உருவாக்கியுள்ளது.
குறுகலான சாலைகள் பல பகுதிகளில் விரிவான சாலைகளாக மாறியுள்ளது. சாலைகளில் தேவையற்ற மணல் திட்டுகள் சிறிய பெரிய முட்புதர்கள் செடிகள் குப்பைகள் ஆகியவற்றை அதிகாரிகள் கண்காணிப்பில் ஊழியர்கள் பணியாளர்கள் செய்து வருகின்றனர். அவ்வப்போது மாநகராட்சி பகுதியில் நடைபெறும் பணிகளை எந்த நேரம் என்று பார்க்காமல் ஆய்வுகளை மேயர் ஜெகன் பெரியசாமி செய்து வருகிறார்.
இந்நிலையில் சண்முகபுரம் சாலையில் தற்போது நடைபெற்று வரும் மணல் திட்டுகள் அகற்றும் பணிகளையும் கடற்கரை சாலையில் நடைபெறும் வடிகால் கட்டுமான பணிகளையும் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்ககொண்டு தரமான முறையில் புதிய பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று ஒப்பந்ததாரர்களிடம் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். ஆய்வின்போது மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை, ராமேசுவரம் ரயில்கள் தாம்பரம் வரை மட்டுமே இயக்கம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:28:06 AM (IST)

செல்போன் பார்த்ததைக் கண்டித்த பெற்றோர்: 8ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:23:45 AM (IST)

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா... பாட்டு பாடி முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம்!
சனி 4, ஏப்ரல் 2026 10:44:09 AM (IST)

பேருந்து மோதி நண்பர்கள் இருவர் உயிரிழப்பு: திருவிழாவிற்கு வந்த இடத்தில் சோகம்
சனி 4, ஏப்ரல் 2026 8:53:59 AM (IST)

கடன் கேட்ட நண்பனை கல்லால் அடித்துக் கொன்ற வாலிபர் கைது: குடிபோதையில் வெறிச்செயல்!
சனி 4, ஏப்ரல் 2026 8:47:35 AM (IST)

நெல்லையில் 100 அடி நீளத் துணியில் தேர்தல் ஓவியம்: மாணவ, மாணவிகள் அசத்தல்!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 4:16:59 PM (IST)


KumarSep 27, 2022 - 02:51:37 PM | Posted IP 162.1*****