» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு பசுமை ஆசிரியர் விருது

செவ்வாய் 27, செப்டம்பர் 2022 10:15:59 AM (IST)தருமபுரியில் நடைபெற்ற விழாவில் புதூர் பள்ளிகளை சேர்ந்த வேளாண் தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு பசுமை ஆசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது.

தர்மபுரி பசுமை மற்றும் கல்வி அறக்கட்டளை தொடக்க விழா மற்றும் பசுமை ஆசிரியர் விருது வழங்கும் விழா ஆகிய இரு பெரும் விழா தா்மபுரியில்  நடந்தது. பசுமை மற்றும் அறக்கட்டளை நிறுவனர் மகேந்திரன் தலைமை வகித்தாா். இவ்விழாவில் தமிழகத்தை சேர்ந்த அரசு பள்ளி, அரசு நிதி உதவி பெறும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் 51 ஆசிரியர்களை தேர்வு செய்து விருது வழங்கப்பட்டது.
 
இதில் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தாலுகா புதூர் யூனியனை சேர்ந்த புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி தொழில்கல்வி வேளாண் ஆசிரியர் காளிராஜ், நாகலாபுரம் சாமி அய்யா நாடார் மேல் நிலைப்பள்ளி தொழிற்கல்வி வேளாண் ஆசிரியர் சுரேஷ்குமார் ஆகிய இருவருக்கும் "பசுமை ஆசிரியர்  விருது” வழங்கப்பட்டது.


மக்கள் கருத்து

KVP kumarSep 27, 2022 - 01:00:58 PM | Posted IP 162.1*****

Congratulations!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory