» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மீன் லோடு ஏற்றிச் சென்ற ஆட்டோ கடலில் மூழ்கியது: டிரைவர் உயிர்தப்பினார்

செவ்வாய் 27, செப்டம்பர் 2022 12:14:43 PM (IST)குளச்சலில் மீன் லோடு ஏற்றிச்சென்ற சரக்கு வாகனம் கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்தவர் பாபின். இவருக்கு சொந்தமான டாடா ஏஸ் "லோடு ஆட்டோ" வாகனத்தை மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்த டிரைவர் ரெஜி என்பவர் ஓட்டி வருகிறார். இன்று காலை டிரைவர் ரெஜி குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகுகளில் இருந்து மீன்களை இறக்கி டாடா ஏஸ் வாகனம் மூலம் ஏலக்கூடத்திற்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

வாகனத்தில் மீன்களை ஏற்றி கொண்டு ஏலக்கூடத்திற்கு சென்ற டாடா ஏஸ் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கடல் பகுதியை நோக்கி உருண்டு ஓடியது இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர் ரெஜி வாகனத்தில் இருந்து வெளியே குதித்த நிலையில் வாகனம் கடலில் விழுந்தது இதில் அதிர்ஷ்டவசமாக டிரைவர் உயிர் தப்பிய நிலையில் மீன் பாரத்துடன் கடலில் விழுந்த லோடு ஆட்டோ முழுவதுமாக கடலில் மூழ்கியது இதனையடுத்து அந்த வாகனம் மீனவர்கள் உதவியுடன் கயிறு கட்டி கிரைன் மூலம் மீட்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory