» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடியில் செப்.28ல் ரேபிஸ் தடுப்பூசி முகாம்!

செவ்வாய் 27, செப்டம்பர் 2022 3:11:23 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 28ஆம் தேதி செல்லப் பிராணிகளுக்கான ரேபிஸ் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு : தூத்துக்குடி மாவட்டத்தில் 28.09.2022-அன்று உலக ரேபிஸ் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி, கால்நடை பன்முக மருத்துவமனை உள்ளிட்ட தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை மருத்துவமனைகள் மற்றும் கால்நடை மருந்தகங்களில் காலை 8 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை செல்லப் பிராணிகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது.

பொது மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் செல்லப் பிராணிகளை ரேபிஸ் நோய் பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

tuticorianSep 27, 2022 - 04:12:45 PM | Posted IP 162.1*****

Street dogs menace is a serious threat to human lives especially to children walking alone in the streets. Kindly take necessary action

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory