» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

இளம்பெண் கொலையில் திடீர் திருப்பம்: ஆசைக்கு இணங்க மறுத்ததால் மாமனார் வெறிச்செயல்!

செவ்வாய் 27, செப்டம்பர் 2022 4:43:08 PM (IST)

செங்கோட்டை அருகே இளம்பெண் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக ஆசைக்கு இணங்க மறுத்ததால் மாமனார் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள லாலாகுடியிருப்பு கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் இசக்கிராஜ் (35). இவரது முதல் மனைவி பிரிந்து சென்றுவிட்டதால் மத்தளம்பாறையை சேர்ந்த பத்மாவதி(30) என்பவரை திருமணம் செய்து கொண்டார். நேற்று மதியம் பத்மாவதி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு அவரது மாமனார் முருகேசன் வந்துள்ளார். 2 பேரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் முருகேசன் திடீரென பத்மாவதியின் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

இதுதொடர்பாக புளியரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர் வழக்குப்பதிவு செய்து முருகேசனிடம் விசாரணை நடத்தினர். முருகேசன் அப்பகுதியில் பஞ்சாயத்து சார்பில் தெருக்களுக்கு குடிதண்ணீர் திறந்துவிடும் வேலை பார்த்து வருகிறார். அவருக்கு குழந்தை இல்லாததால் இசக்கிராஜை தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளார். ஆனால் இசக்கிராஜிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக அவரது முதல் மனைவி அவரை பிரிந்து சென்றுவிட்டார். அதனை தொடர்ந்து அவருக்கு பத்மாவதியை 2-வதாக அவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இந்நிலையில் வளர்ப்பு தந்தையான முருகேசன் தனது 2-வது மருமகளை தவறான கண்ணோட்டத்தில் பார்த்ததாக கூறப்படுகிறது. திருமணம் ஆனதில் இருந்தே மருமகளை தொந்தரவு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. சம்பவத்தன்று பத்மாவதி வீட்டில் தனியாக இருந்தபோது முருகேசன் சென்றுள்ளார். அங்கு அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது முருகேசன் ஆத்திரத்தில் பத்மாவதியின் கழுத்தை நெரித்துக்கொலை செய்துள்ளார். பின்னர் அனைவரையும் நம்ப வைப்பதற்காக மருமகள் அடிக்கடி செல்போனில் பேசியதாவும், அவளது நடத்தை சரியில்லை என்றும் கூறியதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory