» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பாலக்காடு - திருச்செந்தூர் ரயில் வழக்கம் போல் இயங்கும்: திண்டுக்கல் ரயில் செங்கோட்டை வரை நீட்டிப்பு!
செவ்வாய் 27, செப்டம்பர் 2022 5:54:21 PM (IST)
பாலக்காடு - திருச்செந்தூர் - பாலக்காடு விரைவு ரயில்கள் செப்டம்பர் 28 முதல் செப்டம்பர் 30 வரை வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில், கோவில்பட்டி அருகே குமாரபுரம் ரயில் நிலைய ரயில் பாதை பராமரிப்பு பணிகளுக்காக செப்டம்பர் 28 முதல் செப்டம்பர் 30 வரை பாலக்காடு - திருச்செந்தூர் - பாலக்காடு விரைவு ரயில்கள் (16731/16732) கோவில்பட்டி மற்றும் மதுரை - திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. பராமரிப்பு பணிகள் நடைபெறுவதில் தாமதம் ஏற்படுவதால் பாலக்காடு - திருச்செந்தூர் - பாலக்காடு விரைவு ரயில்கள் செப்டம்பர் 28 முதல் செப்டம்பர் 30 வரை வழக்கம்போல் இயங்கும்.
திண்டுக்கல் ரயில் செங்கோட்டை வரை நீட்டிப்பு
மயிலாடுதுறை - திண்டுக்கல் இடையே ஒரு விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலையும் மதுரை செங்கோட்டை ரயிலையும் ஒன்றாக இணைத்து ஒரே ரயிலாக இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அக்டோபர் 24 முதல் மயிலாடுதுறை - திண்டுக்கல் - மயிலாடுதுறை விரைவு ரயில்கள் (16847/16848) மற்றும் மதுரை - செங்கோட்டை - மதுரை முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் (06665/06662) ஆகிய இரண்டும் ஒன்றாக இணைக்கப்பட்டு ஒரே ரயிலாக புதிய ரயில் எண்களுடன் இயக்கப்படும்.
அதன்படி மயிலாடுதுறை - செங்கோட்டை விரைவு ரயில் (16847) மயிலாடுதுறையிலிருந்து காலை 11.30 மணிக்கு புறப்பட்டு இரவு 09.30 மணிக்கு செங்கோட்டை வந்து சேரும். மறு மார்க்கத்தில் செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரயில் (16848) செங்கோட்டையிலிருந்து காலை 07.00 மணிக்கு புறப்பட்டு மாலை 05.10 மணிக்கு மயிலாடுதுறை சென்று சேரும்.
இந்த ரயில்கள் குத்தாலம், ஆடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், பூதலூர், திருவெறும்பூர் மஞ்சத்திட,ல் திருச்சி, மணப்பாறை, வையம்பட்டி, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், கள்ளிக்குடி, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன் கோவில், பாம்ப கோவில் சந்தை, கடையநல்லூர், தென்காசி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 12 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள் மற்றும் 2 இரண்டாம் வகுப்புடன் கூடிய சரக்கு பெட்டிகள் இணைக்கப்படும். என அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலியில் 2480 தனியார் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினி வழங்கல்!
புதன் 28, ஜனவரி 2026 5:27:33 PM (IST)

கேரளாவிற்கு கனிமவளம் ஏற்றிச்சென்ற லாரி மீது பெட்ரோல் குண்டு வீச்சு: டிரைவர் படுகாயம்
புதன் 28, ஜனவரி 2026 8:33:50 AM (IST)

மூதாட்டியை அடித்துக்கொன்ற 5 பேருக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
செவ்வாய் 27, ஜனவரி 2026 9:24:25 PM (IST)

கர்ப்பிணி பெண் மர்மசாவில் திடீர் திருப்பம்: கொலை செய்து நாடகமாடிய அரசு ஊழியர் கைது!
செவ்வாய் 27, ஜனவரி 2026 7:48:56 AM (IST)

கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவியில் குடியரசு தினவிழா கோலாகலம்
திங்கள் 26, ஜனவரி 2026 8:35:39 PM (IST)

திருநெல்வேலியில் குடியரசு தின விழா கோலாகலம் : ஆட்சியர் சுகுமார் தேசிய கொடி ஏற்றினார்!
திங்கள் 26, ஜனவரி 2026 12:06:10 PM (IST)

