» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
ஆட்சியர் அலுவலக ஊழியர் வீட்டில் ரூ.9 லட்சம் நகைகள் திருட்டு: போலீஸ் விசாரணை
சனி 3, டிசம்பர் 2022 10:21:45 AM (IST)

தென்காசியில் ஆட்சியர் அலுவலக ஊழியர் வீட்டில் ரூ.9 லட்சம் மதிப்பிலான நகைகளை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தென்காசி குத்துக்கல்வலசை கே.ஆர்.காலனி பகுதியைச் சேர்ந்த ஜெகன்நாத் என்பவருடைய மனைவி மகேஸ்வரி. இவர் தென்காசி ஆட்சியர் அலுவலகத்தில் ஆதி திராவிட நலத்துறை வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இரவு இவர் வழக்கம் போல் வீட்டில் தூங்கினார். எழுந்து பார்த்தபோது, பீரோவில் இருந்த 23 பவுன் தங்க நகைகள் காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் தென்காசி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். மோப்பநாய் ரிக்கி வரவழைக்கப்பட்டது. அது வீட்டில் மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் சென்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர்.
மகேஸ்வரி இரவில் தூங்கும் முன்பு கதவை பூட்டாமல் திறந்து வைத்து உள்ளார். இதனால் மர்மநபர்கள் நள்ளிரவில் வீடு புகுந்து நகைகளை திருடி சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. திருட்டு போன நகைகளின் மதிப்பு ரூ.9 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த இளம்பெண் தற்கொலை: 4 குழந்தைகள் பரிதவிப்பு
ஞாயிறு 13, ஜூலை 2025 10:59:59 AM (IST)

பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்
சனி 12, ஜூலை 2025 4:17:07 PM (IST)

ஆசிரியைகள் பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஆசிரியர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்!
சனி 12, ஜூலை 2025 3:38:39 PM (IST)

வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
வெள்ளி 11, ஜூலை 2025 4:08:36 PM (IST)

உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி: மாவட்ட வருவாய் அலுவலர் துவக்கி வைத்தார்
வெள்ளி 11, ஜூலை 2025 12:50:40 PM (IST)

சுங்கச்சாவடியில் டிரைவர், கண்டக்டர்களிடம் கையெழுத்து வாங்கி அரசு பஸ்களை அனுமதித்த ஊழியர்கள்
வெள்ளி 11, ஜூலை 2025 8:22:12 AM (IST)

சாமான்யன்Dec 3, 2022 - 02:03:12 PM | Posted IP 59.91*****