» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லை மாவட்ட எஸ்பியை கைது செய்ய உத்தரவு
சனி 3, டிசம்பர் 2022 12:11:46 PM (IST)
நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளரை கைது செய்து அழைத்து வருமாறு, தென் மண்டல ஐஜிக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டம், சிவந்திபட்டி கிராமத்தைச் சேர்ந்த பரமானந்தன் என்ற பட்டியல் இனத்தைச் சேர்ந்தவரின் நிலம் அபகரிப்பு தொடர்பாக புகார் அளித்தும் மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.இது தொடர்பாக, தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்திடம் பரமானந்தன் அளித்த புகாரில் அறிக்கை கேட்டும் விளக்கம் அளிக்காமல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் ஆஜராகமல் இருந்துள்ளார்.
இந்நிலையில், நேரில் ஆஜராக இரண்டு முறை ஆணையம் வாய்ப்பு கொடுத்தும் அவர் ஆஜராகாததால், தற்போது நெல்லை எஸ்பி சரவணனை கைது செய்து ஆணையத்தில் ஆஜர் செய்யும்படி தென் மண்டல காவல்துறை தலைவர் அஸ்ராக் கார்க்கிற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் இன்று (டிச.3) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், ஆணையத்தின் உத்தரவை அவமதித்த காரணத்திற்காக நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணனிடம் ரூ.500 அபராதம் வசூலிக்கவும் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை, ராமேசுவரம் ரயில்கள் தாம்பரம் வரை மட்டுமே இயக்கம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:28:06 AM (IST)

செல்போன் பார்த்ததைக் கண்டித்த பெற்றோர்: 8ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:23:45 AM (IST)

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா... பாட்டு பாடி முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம்!
சனி 4, ஏப்ரல் 2026 10:44:09 AM (IST)

பேருந்து மோதி நண்பர்கள் இருவர் உயிரிழப்பு: திருவிழாவிற்கு வந்த இடத்தில் சோகம்
சனி 4, ஏப்ரல் 2026 8:53:59 AM (IST)

கடன் கேட்ட நண்பனை கல்லால் அடித்துக் கொன்ற வாலிபர் கைது: குடிபோதையில் வெறிச்செயல்!
சனி 4, ஏப்ரல் 2026 8:47:35 AM (IST)

நெல்லையில் 100 அடி நீளத் துணியில் தேர்தல் ஓவியம்: மாணவ, மாணவிகள் அசத்தல்!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 4:16:59 PM (IST)

