» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவிக்கு அறிவியல் இன்ஸ்பயர் விருது
சனி 4, பிப்ரவரி 2023 5:41:07 PM (IST)

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி மதுபாலா அறிவியல் இன்ஸ்பயர் விருது பெற்றார்.
மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சகம் சார்பில் மாநில அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான அறிவியல் இன்ஸ்பயர் விருதுக்கான போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ,மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
இப் போட்டிகளில் பங்கேற்ற தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி மதுபாலா காலணிகளில் இருந்து மொபைல் சார்ஜிங் என்ற தலைப்பில் ஆய்வு கட்டுரை சமர்ப்பித்தார். இதில் மாணவி மதுபாலா மாவட்ட அளவில் முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளார். இந்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை சார்பில் சான்றிதழ்களும், ரூ.10 ஆயிரம் ரொக்க பரிசும், அறிவியல் இன்ஸ்பயர் விருதும் மாணவி மதுபாலாவிற்கு வழங்கப்பட்டன.
அறிவியல் இன்ஸ்பயர் விருது பெற்ற மாணவி மதுபாலாவை ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகரும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான கே.திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, பள்ளி இயக்குநரும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான தி.மிராக்ளின் பால்சுசி, பள்ளி தலைமை ஆசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமை ஆசிரியை சுப்பமாள், நிர்வாக அலுவலர் கே.எஸ்.கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
வியாழன் 30, மார்ச் 2023 3:04:39 PM (IST)

பற்கள் உடைந்ததற்கும், போலீசாருக்கும் எந்த தொடர்பும் இல்லை: வாலிபர் அந்தர் பல்டி!
வியாழன் 30, மார்ச் 2023 11:35:49 AM (IST)

காவல் நிலையங்களில் இதுவரை கேள்விப்படாத காட்டுமிராண்டித்தனம்: வைகோ ஆவேசம்!
புதன் 29, மார்ச் 2023 4:21:20 PM (IST)

பற்களை பிடிங்கிய ஏஎஸ்பி மீது நடவடிக்கை: பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
புதன் 29, மார்ச் 2023 3:30:00 PM (IST)

குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை : மற்றொரு குழந்தைக்கு தீவிர சிகிச்சை!!
புதன் 29, மார்ச் 2023 11:54:53 AM (IST)

காவல்துறை அதிகாரி பல் பிடிங்கிய விவகாரம் : சப்-கலெக்டர் விசாரணை தொடர்கிறது
புதன் 29, மார்ச் 2023 11:51:50 AM (IST)
