» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருச்செந்தூரை பார்வையிட முதல்வர் வருகிறார்: அறங்காவலர் குழு தலைவர் பேட்டி

திங்கள் 6, பிப்ரவரி 2023 3:07:13 PM (IST)

திருச்செந்தூர் கோவிலில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட தமிழக முதல்வர் வரவுள்ளதாக அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன் தெரிவித்தார்.

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை ஒவ்வொரு மாதமும் அமைச்சர் மற்றும் ஆணையர் ஆய்வு செய்கின்றனர். வளர்ச்சி திட்ட பணிகள் ஒவ்வொரு நிலையாக நடைபெற்று வருகிறது. 

தைப்பூசத்தை ஒட்டி பக்தர்களின் வசதிக்காக 130 தற்காலிக கழிவறைகள் அமைக்கப்பட்டிருந்தது. கட்டுமான பணிகள் கோவிலில் பல இடங்களில் நடந்து வருவதால் இதற்கு மேல் கழிப்பிடங்கள் அமைக்க முடியவில்லை. மாசி திருவிழாவிற்கு கூடுதலாக கழிப்பிடம், குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடிப்படை வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளால், ஓராண்டில் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறிவிடும். இப்பணிகளை பார்வையிட முதல்-அமைச்சர் வர உள்ளார் என தெரிவித்தார்.


மக்கள் கருத்து

கோமாளிFeb 8, 2023 - 10:29:56 AM | Posted IP 162.1*****

தேர்தல் வரும்போது குடும்ப தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் மாதிரி இன்னும் நிறைய உருட்ட வருவாங்க..

kumarFeb 7, 2023 - 01:11:32 PM | Posted IP 162.1*****

therthalukaga neengal podum naadagathai makkal arivargal..... mosa maana roadinal tiruchendur paathayathirai bakthargal padum thunbam miga athigam... kovilil baktargaluku entha adippadai vasathigalum murayaga illai....kovil undiyal panam engae than selgiratho??

ஓட்டு போட்ட முட்டாள்Feb 7, 2023 - 10:42:34 AM | Posted IP 162.1*****

தூத்துக்குடி வழியாக வர சொல்லுங்க . ரோடு சுத்தமாயிடும்..

billaFeb 7, 2023 - 03:35:59 AM | Posted IP 106.2*****

தேர்தல் வரும் நேத்தில் மட்டுமே சாலைகளை பராமரிக்க நிதியை EMI போன்று வழங்கும் NABARB BANK மற்றும் ROAD CONTRACTOR பற்றி தெரிந்து கொண்டு முதல்வர் பார்வையிட வருகிறார்.....சாலைகளை பார்வையிட

TAMILARKALFeb 6, 2023 - 03:34:10 PM | Posted IP 162.1*****

தேர்தல் வரப்போகிறது .... மக்களுக்கு தெரியும் ....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory