» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
வாட்ஸ்அப்பில் உறவினர்களுக்கு தகவல் அனுப்பிவிட்டு விவசாயி தற்கொலை
திங்கள் 6, பிப்ரவரி 2023 5:16:18 PM (IST)
திசையன்விளை அருகே மனைவி மற்றும் உறவினர்களுக்கு வாட்ஸ்அப் மூலமாக தகவல் அனுப்பிவிட்டு விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உவரியை சேர்ந்தவர் சிவக்குமார்(46). விவசாயி. இவருக்கு சொந்தமான தோட்டம் அப்பகுதியில் உள்ளது. நேற்று முன்தினம் தோட்டத்தில் அவர் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை திசையன்விளையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த நிலையில் அவர் பரிதாபமாக இறந்துவிட்டார்.
இதுதொடர்பாக உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். சமீபகாலமாக அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் சொத்து தொடர்பாக பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று தற்கொலை செய்ய முடிவு செய்து, தான் விஷம் குடிக்கும் தகவலை தனது உறவினர்கள், பெற்றோர், மனைவி உள்ளிட்டோருக்கு வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி உள்ளார் என்ற விபரம் தெரியவந்தது. தொடர்ந்து இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
வியாழன் 30, மார்ச் 2023 3:04:39 PM (IST)

பற்கள் உடைந்ததற்கும், போலீசாருக்கும் எந்த தொடர்பும் இல்லை: வாலிபர் அந்தர் பல்டி!
வியாழன் 30, மார்ச் 2023 11:35:49 AM (IST)

காவல் நிலையங்களில் இதுவரை கேள்விப்படாத காட்டுமிராண்டித்தனம்: வைகோ ஆவேசம்!
புதன் 29, மார்ச் 2023 4:21:20 PM (IST)

பற்களை பிடிங்கிய ஏஎஸ்பி மீது நடவடிக்கை: பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
புதன் 29, மார்ச் 2023 3:30:00 PM (IST)

குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை : மற்றொரு குழந்தைக்கு தீவிர சிகிச்சை!!
புதன் 29, மார்ச் 2023 11:54:53 AM (IST)

காவல்துறை அதிகாரி பல் பிடிங்கிய விவகாரம் : சப்-கலெக்டர் விசாரணை தொடர்கிறது
புதன் 29, மார்ச் 2023 11:51:50 AM (IST)
