» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஆட்சியர் அலுவலகத்தில் கர்ப்பிணி பெண் தர்ணா: காவல்துறையினர் மீது பரபரப்பு புகார்!

திங்கள் 6, பிப்ரவரி 2023 5:35:31 PM (IST)



நள்ளிரவில் வீடுபுகுந்து மிரட்டிய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கர்ப்பினி பெண், கணவருடன் தர்ணா போரட்டத்தில் ஈடுபட்டார். 

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள பேட்மா நகரைச் சேர்ந்த முத்துச்செல்வம், அவரது மனைவி இசக்கியம்மாள் ஆகியோர் கைக்குழந்தையுடன் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் போராட்டத்தை கைவிட்ட அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அவர் அளித்துள்ள மனுவில், "எனது கணவர் சமூக செயற்பாட்டாளராக செயல்பட்டு வருகிறார். அவர் வீட்டில் இல்லாத நேரத்தில் நள்ளிரவு 1 மணியளவில் சோதனை என்ற பெயரில் ஸ்ரீவைகுண்டம் காவல் உதவி ஆய்வாளர் அருள் சாம்ராஜ் மற்றும் போலீசார் எனது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து  கெட்ட வார்த்தைகளால் திட்டி, வீட்டில் இருந்த பொருட்களை சூறையாடினர். எனது மாமனாரை தாக்கினர். 

இது தொடர்பாக உள்துறை செயலாளர், காவல்துறை இயக்குநர், காவல்துறை துணைத்தலைவர், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர்க்கு பதிவு தபால் மூலம் புகார் அளித்தோம் அவர்கள் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக என்னை சில நபர்களை வைத்து புகாரை வாபஸ் வாங்குமாறு என்னையும் என் குடும்பத்தாரையும் மிரட்டி வருகிறார். எனவே அத்துமீறிய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து

தேவேந்திரன்Feb 7, 2023 - 05:03:51 AM | Posted IP 162.1*****

இவர்களை போல நல்ல உள்ளங்களை பாதுகாக்கவிடில் சமூகம் சீரழிவினை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று பொருள்.

சமூக செயற்பாட்டாளர்Feb 6, 2023 - 06:26:53 PM | Posted IP 162.1*****

என்றாலே பிரச்சினை செய்பவர் தான்..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory