» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தபால் நிலையங்களில் செல்வமகள் சேமிப்பு திட்ட சிறப்பு முகாம்

செவ்வாய் 7, பிப்ரவரி 2023 8:16:36 AM (IST)

தூத்துக்குடி கோட்ட தபால் அலுவலகங்களில் வருகிற 9, 10-ம் தேதிகளில்  செல்வமகள் சேமிப்பு திட்ட சிறப்பு முகாம் நடக்கிறது.

இது குறித்து தூத்துக்குடி கோட்ட தபால் கண்காணிப்பாளர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "தமிழ்நாட்டின் அனைத்து தபால் அலுவலகங்களிலும் 75-வது சுதந்திர தின அமுத பெருவிழாவை முன்னிட்டு 10.02.2023 அன்று 7 லட்சத்து 50 ஆயிரம் பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்புத் திட்டம் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான சிறப்பு முகாம் வருகிற 9, 10-ம் தேதிகளில் நடக்கிறது. இந்த சேமிப்பு திட்டம் பெண் குழந்தைகளின் மேம்பாட்டுக்காக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த திட்டத்தில் 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு அவர்களது பெற்றோர், பாதுகாவலர் இந்த கணக்கை ரூ.250/- செலுத்தி அனைத்து தபால் அலுவலகங்களிலும் தொடங்கலாம். ஒரு நிதியாண்டில் குறைந்த பட்ச தொகை ரூ.250-ம், அதிக பட்ச தொகையாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வரையும் கணக்கில் செலுத்தலாம். அசலுடன் சேர்ந்து வட்டியும், அடுத்த வருட அசலாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். தற்போது 7.6 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. கணக்கில் செலுத்தும் தொகை, வட்டி, மற்றும் முதிர்வு தொகை என அனைத்திற்கும் பெற்றோருக்கு வருமான வரிவிலக்கு பெறலாம். 

செல்வமகள் சேமிப்பு கணக்கு 21 ஆண்டுகளுக்கு நடப்பில் இருக்கும். குழந்தை 10ம் வகுப்பு முடிந்ததும் அல்லது 18 வயது அடைந்ததும் மேற்படிப்புக்காக 50 சதவீதம் தொகையைப் பெறலாம். பெண் குழந்தையின் திருமணத்தின் போது முழு தொகையையும் எடுத்துக்கொள்ளலாம். எனவே சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பெற்றோர் தங்கள் பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டத்தை தொடங்கி தங்களின் பெண் குழந்தைகளின் ஒளிமயமான எதிர்காலத்தை உறுதி செய்ய வேண்டும்" இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து

tamilanFeb 7, 2023 - 12:12:23 PM | Posted IP 162.1*****

nallathu arumaiyana thittam

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory