» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்காசி மாவட்ட புதிய ஆட்சியராக துரை. இரவிச்சந்திரன் பொறுப்பேற்பு

செவ்வாய் 7, பிப்ரவரி 2023 10:04:57 AM (IST)



தென்காசி மாவட்ட புதிய ஆட்சியராக துரை. இரவிச்சந்திரன் பொறுப்பேற்றுக்கொண்டார் .

தென்காசி மாவட்டத்தின் ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்ட ஆட்சியர் துரை.இரவிச்சந்திரன் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்தவர். இவர் எம்.எஸ்சி., எம்.பில். பட்டதாரி. சென்னை லயோலா கல்லூரியில் படித்தவர். கடந்த 2003-ம் ஆண்டு குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று சிவகங்கை, நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் துணை ஆட்சியராக பணியாற்றியுள்ளார். தூத்துக்குடி, கோவை, நாமக்கல் மாவட்டங்களில் வருவாய் அலுவலராக பணியாற்றியுள்ளார். 

பின்னர் 2015-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். ஆக பதவி உயர்வு பெற்று, கலால் மற்றும் ஆயத்தீர்வை துறை துணை செயலாளராகவும், பின்னர் எல்காட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். இதன் பிறகு மாநில சிறுபான்மை நல ஆணையத்தில் உறுப்பினர் செயலாளராக பணியாற்றி வந்தார். அங்கிருந்து தென்காசி மாவட்ட ஆட்சியராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு அனைத்து துறை உயர் அதிகாரிகள், ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory