» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லையில் வக்கீல் வீட்டில் ரூ.30 லட்சம் நகை-பணம் கொள்ளை: மர்ம நபர்கள் கைவரிசை!
செவ்வாய் 7, பிப்ரவரி 2023 10:24:37 AM (IST)
நெல்லையில் வக்கீல் வீட்டில் கதவை உடைத்து ரூ.30 லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நெல்லை குலவணிகர் புரம் தெற்கு பைபாஸ் சாலையில் உள்ள பி.பி.சி. காலனியை சேர்ந்தவர் செல்லத்துரை (60). வழக்கறிஞர். இவரது மகள் சென்னை பல்லாவரத்தில் வசித்து வருகிறார். அவரை பார்ப்பதற்காக செல்லத்துரை கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது மனைவி ராமலெட்சுமியுடன் சென்னை சென்றார். இந்நிலையில் இன்று காலை அவர்கள் வீடு திரும்பினர். அப்போது வாசல் கதவு முன்பு மிளகாய் பொடி தூவப்பட்டிருந்தது.
மேலும் கதவின் பூட்டும் உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த செல்லத்துரை உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டின் 3 அறைகளில் உள்ள பீரோக்களை உடைத்து அதில் இருந்த 70 பவுன் தங்க நகைகளையும், ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் ரொக்கப்பணத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ.30 லட்சம் ஆகும்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து மேலப்பாளயைம் போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு மாநகர போலீஸ் துணைகமிஷனர் சீனிவாசன் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. வீட்டில் ஆள் இல்லாததை அறிந்து மர்ம நபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். மேலும் போலீசில் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக வீடு முழுவதும் மிளகாய் பொடி வீசிச்சென்றதும் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்தவர்கள் யார்-யார்? என்று விசாரித்து வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் ஜாமீனில் வந்து தலைமறைவானவர் கைது!
செவ்வாய் 25, நவம்பர் 2025 3:43:37 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் 46.42 சதவீதம் படிவங்கள் இணைய தளத்தில் பதிவேற்றம்: ஆட்சியர் தகவல்!
செவ்வாய் 25, நவம்பர் 2025 11:02:21 AM (IST)

தென்காசி விபத்தில் உயிரிழப்பு 8 ஆக உயர்வு : பஸ்சின் உரிமம் ரத்து!
செவ்வாய் 25, நவம்பர் 2025 8:38:27 AM (IST)

கவின் ஆணவக்கொலை: சுர்ஜித்தின் தந்தை ஜாமீன் மனு மீது நவ.27ல் விசாரணை!
திங்கள் 24, நவம்பர் 2025 5:19:39 PM (IST)

தென்காசி பஸ் விபத்தில் 6 பேர் உயிரிழந்த செய்தி மன வேதனை அளிக்கிறது: விஜய் இரங்கல்
திங்கள் 24, நவம்பர் 2025 4:05:34 PM (IST)

தென்காசி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!
திங்கள் 24, நவம்பர் 2025 3:53:47 PM (IST)




