» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி மாணவிக்கு உலக சாதனை சான்றிதழ் வழங்கல்

செவ்வாய் 7, பிப்ரவரி 2023 12:29:06 PM (IST)தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி மாணவி ஹரிணிக்கு "உலக சாதனை சான்றிதழ்" வழங்கப்பட்டது.

பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு  1002  குயிஸ் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் பங்கேற்ற தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி ஏழாம் வகுப்பு மாணவி ஹரிணி பல்வேறு சுற்றுக்களில் வெற்றி பெற்று இறுதிசுற்றுக்கு தகுதி பெற்றார். 

இறுதி சுற்றில் இம்மாணவி இரண்டாம் இடம் பெற்றார். மாணவி ஹரிணியை பாராட்டி "உலக சாதனையாளர் சான்றிதழ்” வழங்கப்பட்டது. மாணவி ஹரிணியை ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகரும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான கே.திருமலை, பள்ளி தாளாளர் அன்பரசி திருமலை, இயக்குநரும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான தி.மிராக்ளின் பால்சுசி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory