» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஆவின் நிறுவனத்தில் விநியோகஸ்தர்கள் நியமனம்: விண்ணப்பங்கள் வரவேற்பு

செவ்வாய் 7, பிப்ரவரி 2023 4:53:07 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் ஆவின் நிறுவனத்தின் ஐஸ்கிரீம், தயிர் விற்பனை செய்வதற்கு மொத்த மற்றும் சில்லரை விநியோகஸ்தர்கள் நியமனம் செய்யப்பட்ட உள்ளனர்.

இது தொடர்பாக  ஆவின் பொது மேலாளர் தியானேஷ்பாபு வெளியிட்ட செய்திக்குறிப்பு : திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் மூலம் ஐஸ்கிரீம் மற்றும் தயிர் விற்பனை செய்வதற்கு மொத்த மற்றும் சில்லரை விநியோகஸ்தர்கள் நியமனம் செய்யப்பட்ட உள்ளனர். 

திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களை சார்ந்த விருப்பம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் அறிந்து கொள்ள ரெட்டியார்பட்டி சாலையில் அமைந்துள்ள நெல்லை ஆவின் அலுவலகத்திற்கு நேரடியாக வந்து விபரங்களை தெரிந்து கொள்ளலாம் என ஆவின் பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory