» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
செல்போன் பேசியபடி சென்ற வாலிபர் மின்னல் தாக்கி பலி : அம்பை அருகே சோகம்!!
புதன் 29, மார்ச் 2023 11:44:57 AM (IST)
அம்பை அருகே, செல்போன் பேசியபடி சென்ற வாலிபர் இடி-மின்னல் தாக்கியதில் இறந்தார்.
நெல்லை மாவட்டத்தில் கடந்த பல நாட்களாக வெயில் வாட்டி எடுக்கிறது. இதேபோல் நேற்று காலையிலும் நெல்லையில் கடும் வெயில் அடித்தது. மதியம் 2 மணியளவில் வண்ணார்பேட்டை, கொக்கிரகுளம், சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இந்த மழை சிறிது நேரம் நீடித்தது.
இந்தநிலையில் அம்பை பகுதியில் இடி-மின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் இறந்தார். அவருடைய பெயர் சின்னராஜா (36). அம்பை சோலைபுரம் அருகில் உள்ள தோணித்துறையைச் சேர்ந்த சீவலமுத்து மகன் ஆவார். விவசாயியான இவருக்கு திருமணம் ஆகி தங்கமாரி என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். நேற்று மாலையில் வீட்டிலிருந்து அருகில் உள்ள ஆற்றுக்கு குளிக்க நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது தனது செல்போனில் அழைப்பு வரவே எடுத்து பேசும்போது, திடீரென மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். குளிக்க சென்றவர் மின்னல் தாக்கி பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இறந்த சின்னராஜா உடலை கைப்பற்றி அம்பை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பள்ளிகள் திறப்பையொட்டி ஏற்பாடு: நெல்லை மண்டலத்தில் 250 அரசு சிறப்பு பஸ்கள்!
ஞாயிறு 4, ஜூன் 2023 5:14:58 PM (IST)

நாட்டுக்கோழி வளர்க்க மானியம் : ஆட்சியர் தகவல்
சனி 3, ஜூன் 2023 4:04:53 PM (IST)

கூடங்குளம் அணுக்கழிவுகளை அகற்ற கோரி மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
சனி 3, ஜூன் 2023 12:50:00 PM (IST)

கனவில் கூட நினைக்கவில்லை!!- ரயில் விபத்தில் தப்பிய தென்காசி பயணி!
சனி 3, ஜூன் 2023 12:19:10 PM (IST)

பாளை. அருகே பரோலில் வந்தஆயுள் தண்டனை கைதி உயிரிழப்பு
சனி 3, ஜூன் 2023 8:12:58 AM (IST)

கொள்ளையடிக்கும் தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை : தமிழாசிரியர் முன்னணி கோரிக்கை!
வெள்ளி 2, ஜூன் 2023 5:44:28 PM (IST)
