» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பற்கள் உடைந்ததற்கும், போலீசாருக்கும் எந்த தொடர்பும் இல்லை: வாலிபர் அந்தர் பல்டி!
வியாழன் 30, மார்ச் 2023 11:35:49 AM (IST)
நெல்லையில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியதாக கூறப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பமாக கீழே விழுந்து பற்கள் உடைந்ததாக பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர் சிங், சில வழக்குகள் தொடர்பாக விசாரணைக்கு அழைத்து சென்ற 30 பேரின் பற்களை பிடுங்கி கொடூரமாக தாக்கியதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து ஏஎஸ்பி பல்வீர் சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இதுதொடர்பாக விசாரணை நடத்த நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். அதன்படி சேரன்மகாதேவி சப்-கலெக்டர் முகம்மது சபீர் ஆலம் பாதிக்கப்பட்டவர்களிடமும், சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் பணியாற்றும் போலீசாரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் உள்பட 10 போலீசாரும் இன்று சேரன்மகாதேவியில் உள்ள சார் -ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி சார் -ஆட்சியர் முகம்மது சபீர் ஆலம் முன்னிலையில் விளக்கம் அளித்தனர். இந்த விவகாரத்தில் விரும்பத்தகாத சம்பவத்தில் ஈடுபட்ட அம்பாசமுத்திரம் கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இந்நிலையில் நெல்லையில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியதாக கூறப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தான் காவல்துறையால் தாக்கப்படவில்லை என்றும், கீழே விழுந்ததிலேயே தனது பற்கள் உடைந்ததாகவும் பாதிக்கப்பட்ட சூர்யா விளக்கம் அளித்துள்ளார். சேரன்மகாதேவி சப்-கலெக்டரிடம் விசாரணைக்கு ஆஜரான நிலையில் பற்கள் உடைந்ததற்கும், காவல்துறைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சூர்யா கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பள்ளிகள் திறப்பையொட்டி ஏற்பாடு: நெல்லை மண்டலத்தில் 250 அரசு சிறப்பு பஸ்கள்!
ஞாயிறு 4, ஜூன் 2023 5:14:58 PM (IST)

நாட்டுக்கோழி வளர்க்க மானியம் : ஆட்சியர் தகவல்
சனி 3, ஜூன் 2023 4:04:53 PM (IST)

கூடங்குளம் அணுக்கழிவுகளை அகற்ற கோரி மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
சனி 3, ஜூன் 2023 12:50:00 PM (IST)

கனவில் கூட நினைக்கவில்லை!!- ரயில் விபத்தில் தப்பிய தென்காசி பயணி!
சனி 3, ஜூன் 2023 12:19:10 PM (IST)

பாளை. அருகே பரோலில் வந்தஆயுள் தண்டனை கைதி உயிரிழப்பு
சனி 3, ஜூன் 2023 8:12:58 AM (IST)

கொள்ளையடிக்கும் தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை : தமிழாசிரியர் முன்னணி கோரிக்கை!
வெள்ளி 2, ஜூன் 2023 5:44:28 PM (IST)
