» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
வியாழன் 30, மார்ச் 2023 3:04:39 PM (IST)
பாவூர்சத்திரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியின் உறவினர் ஒருவர் திருப்பத்தூரில் உள்ளார். இவர் அங்குள்ள ஒரு தனியார் ஆலையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். அவருக்கும், திருப்பத்தூர் திருமால் நகரை சேர்ந்த ஜெயசீலன் என்பவருடைய மகன் விக்னேஷ் (24) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. விக்னேஷ், பாவூர்சத்திரம் பகுதியை சேர்ந்தவரின் செல்போனை எடுத்து பேசியுள்ளார்.
அப்போது போனை எடுத்த 16 வயது சிறுமிக்கும், விக்னேசுக்கும் பழக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து அந்த சிறுமியிடம் விக்னேஷ் ஆசை வார்த்தை கூறி பேசி வந்துள்ளார். பின்னர் அந்த சிறுமியை வெளியூருக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி பாவூர்சத்திரம் போலீசில் கடந்த ஆண்டு புகார் செய்யப்பட்டது. போலீசார் போச்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவிக்னேசை தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று விக்னேசை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். விக்னேஷ் மீது மோசடி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
வெள்ளி 11, ஜூலை 2025 4:08:36 PM (IST)

உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி: மாவட்ட வருவாய் அலுவலர் துவக்கி வைத்தார்
வெள்ளி 11, ஜூலை 2025 12:50:40 PM (IST)

சுங்கச்சாவடியில் டிரைவர், கண்டக்டர்களிடம் கையெழுத்து வாங்கி அரசு பஸ்களை அனுமதித்த ஊழியர்கள்
வெள்ளி 11, ஜூலை 2025 8:22:12 AM (IST)

குழந்தைகள் இல்லத்தில் கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பலி: முதல்வர் நிவாரணம் அறிவிப்பு
வியாழன் 10, ஜூலை 2025 5:06:20 PM (IST)

படகுகளில் தவெக பெயர் இருந்தால் மானியம் மறுப்பதா? திமுக அரசுக்கு விஜய் கண்டனம்!
வியாழன் 10, ஜூலை 2025 3:50:04 PM (IST)

புனித பயணம் மேற்கொள்ள தமிழக அரசு நிதி உதவி : விண்ணப்பங்கள் வரவேற்பு
வியாழன் 10, ஜூலை 2025 3:15:25 PM (IST)
