» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தென்காசியில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய சிறுபான்மை ஆணைய தலைவர்
புதன் 31, மே 2023 8:29:44 PM (IST)

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சிறுபான்மை ஆணையத்தின் கீழ் இயங்கும்,தென்காசி முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கத்தின் நல திட்ட உதவிகள் வழங்கும் விழா, , மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் தலைமையில் இன்று(31.05.2023) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில்,107 பெண்களுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட தையல் தையல் இயந்திரங்களும்,16 பெண்களுக்கு மாவு ஆட்டும் இயந்திரங்களும், 14 மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையும்,11 பெண்களுக்கு குடிசை தொழில் உதவிகளுமாக ரூபாய் 13,54,200 மதிப்பில் 149 பயனாளிகளுக்கு உதவியும், மாவட்டத்தில் தழிழ் வழி கல்வியில் முதல் 3 மதிப்பெண்கள் பெற்ற நான்கு மாணவர்களுக்கு, கடையநல்லூர்ஷப்ரின் இமானா 590, செங்கோட்டை கலைச்செல்வி 583,சங்கரன்கோயில் முத்துலட்சுமி 583, தென்காசி, கார்த்திகா 582 ஆகியோர்களுக்கு பரிசுகளையும், மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் வழங்கினார்.
நிகழ்ச்சியில்,தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனி நாடார், மாவட்ட பஞ்சாயத்து குழுத் தலைவர் தமிழ் செல்வி போஸ், மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் உதய கிருஷ்ணன், தென்காசி நகர் மன்ற தலைவர் ஆர்.சாதிர், தென்காசி ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் ஷேக் அப்துல்லா,மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் சங்கரநாராயணன், உதவி மக்கள் தொடர்பாளர் தொடர்பு அலுவலர் (செய்தி) ராமசுப்பிரமணியன், வடகரை பேரூராட்சி தலைவர் ஷேக் தாவூத், கவுரவ செயலாளர் முகம்மது ஸலீம்,டாக்டர் அப்துல் அஜீஸ், டாக்டர்.ஆமீர்கான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம்
ஞாயிறு 11, மே 2025 9:33:44 AM (IST)

நெல்லை, பாளை தொகுதிகள் அ.தி.மு.க.வுக்கு வேண்டும்: இபிஎஸ்க்கு தொண்டர்கள் கடிதம்!
சனி 10, மே 2025 12:51:20 PM (IST)

மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து 2 பவுன் தங்க சங்கிலி பறிப்பு: வாலிபர் கைது!
சனி 10, மே 2025 12:44:11 PM (IST)

கூடன்குளம் அணுமின்நிலையத்தில் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை!
சனி 10, மே 2025 11:38:51 AM (IST)

பெட்ரோல் பங்க் ஊழியரிடம் ரூ.36 லட்சம் கொள்ளை: பெண் உள்பட 10 பேர் கும்பல் கைது!
சனி 10, மே 2025 9:04:41 AM (IST)

நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 8, மே 2025 3:56:15 PM (IST)
