» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
டாஸ்மாக் பாரை சூறையாடி ரூ.58 ஆயிரம் பணம் கொள்ளை: மர்ம நபர்கள் கைவரிசை
புதன் 31, மே 2023 8:35:40 PM (IST)
தென்காசியில் டாஸ்மாக் பாரை சூறையாடி ரூ.58 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தென்காசி-பழைய குற்றாலம் சாலையில் உள்ள ஆயிரப்பேரி பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையை ஒட்டி பார் உள்ளது. நேற்றிரவு வழக்கம்போல் பாரை பூட்டிவிட்டு ஊழியர்கள் வீட்டுக்கு சென்றனர். அப்போது சில மர்ம நபர்கள் பாருக்குள் புகுந்து அங்கிருந்த சி.சி.டி.வி. கேமரா மற்றும் கடையில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். பின்னர் கடைக்குள் நுழைந்து அங்கிருந்த ரூ.58 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் பார் ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர்கள் அங்கு வந்து பார்த்தபோது பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை அறிந்தனர். இதுகுறித்து பாரில் வேலை பார்க்கும் வசந்த் என்பவர் குற்றாலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி, கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம்
ஞாயிறு 11, மே 2025 9:33:44 AM (IST)

நெல்லை, பாளை தொகுதிகள் அ.தி.மு.க.வுக்கு வேண்டும்: இபிஎஸ்க்கு தொண்டர்கள் கடிதம்!
சனி 10, மே 2025 12:51:20 PM (IST)

மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து 2 பவுன் தங்க சங்கிலி பறிப்பு: வாலிபர் கைது!
சனி 10, மே 2025 12:44:11 PM (IST)

கூடன்குளம் அணுமின்நிலையத்தில் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை!
சனி 10, மே 2025 11:38:51 AM (IST)

பெட்ரோல் பங்க் ஊழியரிடம் ரூ.36 லட்சம் கொள்ளை: பெண் உள்பட 10 பேர் கும்பல் கைது!
சனி 10, மே 2025 9:04:41 AM (IST)

நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 8, மே 2025 3:56:15 PM (IST)

thirutuமே 31, 2023 - 08:46:16 PM | Posted IP 172.7*****